டெல்லி : ஒன்றிய அரசின் விஸ்தாரா திட்டம் தொடர்பாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் மணீஷ் திவாரி ட்வீட் ஒன்றை செய்திருந்தார்.
அதில், “2024ஆம் ஆண்டுக்குள் மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஏனெனில் புதிய நாடாளுமன்றம் 1000 இருக்கைகளுடன் கட்டப்பட்டுவருகிறது.
ஆகவே நான் இதை உறுதியாக அறிவிக்கிறேன். இந்தத் திட்டம் உண்மையாக இருந்தால் தாக்கத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார்.
மற்றொரு ட்வீட்டில், “மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பாதிக்கு பாதி பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 20 ஆண்டுகளாக போராடிவருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி ப. சிதம்பரம் ட்விட்டரில் அளித்துள்ள பதிலில், “இந்த விவகாரம் தொடர்பாக பொதுவிவாதம் தேவை. இது மக்கள் தொகை அடிப்படையில் நடைபெற்றால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக 2019 டிசம்பர் 16 ஆம் தேதி, மக்களவையில் இடங்களின் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த வேண்டும் பிரணாப் முகர்ஜி வாதிட்டார். அப்போது, அதிக மக்களவை மற்றும் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரணாப் முகர்ஜி அடிக்கோடிட்டுக் காட்டினார்.
தற்போதுள்ள நிலவரப்படி நாடாளுமன்றத்தில் 543 இந்திய உறுப்பினர்கள் மற்றும் இரு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்கள் உள்ளனர்.
இதையும் படிங்க : எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு