ETV Bharat / bharat

நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் - காங்கிரஸ் கடும் எதிர்ப்பு! - PMML name changed in tamil

Prime Ministers’ Museum and Library: நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என மாற்றம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 16, 2023, 4:08 PM IST

டெல்லி: புதிதாக பெயரிடப்பட்டு உள்ள பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் துணைத் தலைவர் ஏ சூர்ய பிரகாஷ் இது தொடர்பாக 'X' தளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், "ஆகஸ்ட் 14, 2023 முதல் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்பது பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் (Prime Ministers Museum and Library Society) என அழைக்கப்படும்.

இது சமூகத்தின் ஜனநாயகமயமாக்கல் மற்றும் பல்வகைப்படுத்தல் திறன் உடன் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. சுதந்திர தின வாழ்த்துகள்” என தெரிவித்து உள்ளார். இந்த பதிவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சகத்தை டேக் செய்து உள்ளார்.

முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தின் மத்தியில் நடைபெற்ற நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் (NMML) சிறப்புக் கூட்டத்தில், பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் (PMML) என பெயர் மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், இதனை கலாச்சார அமைச்சகமும் உறுதி செய்து உள்ளது.

இந்த பெயர் மாற்ற முடிவானது, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் (Nehru Memorial Museum and Library) Nehru Memorial Museum and Librarசிறப்புக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் 162வது கூட்டத்தில் இதற்கான அனுமதியை அதன் நிர்வாக கவுன்சில் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அது மட்டுமல்லாமல், கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று பிரதான் மந்திரி சங்கராலயா (Pradhanmantri Sangrahalaya) பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நிகழ்வின்போது நேரு-காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகிய 3 பேரும் நேரு-காந்தி குடும்பத்தில் இருந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்தனர் என்பதும் நினைவுகூரத்தக்கது.

மேலும், இது தொடர்பாக மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “நேரு அருங்காட்சியக கட்டடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது முழுவதுமான தொலைநோக்கு தொழில்நுட்பங்கள் உடன் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இதில் நேருவின் பங்கை பற்றி விளக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் நாட்டிற்கு ஏற்பட்ட பல்வேறு சவால்களை பிரதமர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதை பிரதிபலிக்கும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது அனைத்து பிரதமர்களையும் அங்கீகரிக்கிறது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள 'X' பதிவில், “இன்று முதல் ஒரு தனித்துவமான நிறுவனத்தின் பெயர் புதிதாக மாற்றப்பட்டு உள்ளது. நேருவையும், நேருவின் பாரம்பரியத்தையும் மறுப்பது, சிதைப்பது, அவதூறு செய்வது மற்றும் அழிப்பது என்ற ஒன்றை மட்டுமே பிரதமர் கொண்டுள்ளார். நிறுவனத்தின் பெயரில் உள்ள ‘N’ ஐ அழித்துவிட்டு ‘P’ ஐப் போட்டுள்ளார். அந்த 'P' உண்மையில் அற்பத்தனமானது மற்றும் கோபத்திற்கானது” என தெரிவித்து உள்ளார்.

  • From today, an iconic institution gets a new name. The world renowned Nehru Memorial Museum and Library (NMML) becomes PMML—Prime Ministers’ Memorial Museum and Library.

    Mr. Modi possesses a huge bundle of fears, complexes and insecurities, especially when it comes to our first…

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) August 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேபோல், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது எதிர்ப்பை பதிவு செய்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “இந்த செயல் நமது முதல் பிரதமரான நேருக்கு எதிரான செயல். அவர் நாட்டின் விடுதலைக்காக சிறை சென்று உள்ளார். வாஜ்பாய்-இன் நினைவு நாளில் நேருவின் வாழ்வை மறைப்பதற்கு பிரதமர் விரும்புகிறார்.

  • #WATCH | On Nehru Memorial Museum and Library renamed as Prime Minister's Museum and Library, Congress MP Manickam Tagore says, "It's the hate against Pandit Nehru Ji, our first prime minister. He went to jail for our freedom. PM Modi wants to erase the legacy of Pandit Nehru on… pic.twitter.com/kv1Ae2lJ3M

    — ANI (@ANI) August 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இது பிரதமர் மோடியின் அற்பத்தனத்தை காட்டுகிறது. நேரு மக்களின் இதயங்களில் வாழ்கிறார். அவர் இந்தியா முழுமையையும் விரும்பினார்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மந்திரத்திற்கு பதில் ராகுல், சோனியா பெயர் கூறி திருமணம்.. காங்கிரஸ் அலுவலகத்தில் சுவாரஸ்ய கல்யாணம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.