ETV Bharat / bharat

அமெரிக்காவில் சீக்கியப்பெண் தற்கொலை - கணவன் கொடுமையால் விபரீத முடிவு

அமெரிக்காவில் இருக்கும் இந்தியாவைச்சேர்ந்த சீக்கியப்பெண் ஒருவர் தினமும் கணவன் செய்யும் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார்.

author img

By

Published : Aug 7, 2022, 4:38 PM IST

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்: இந்தியாவைச்சேர்ந்த சீக்கியப் பெண் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த 8 ஆண்டுகளாக பெண் குழந்தை பெற்றதற்காகவும், ஆண் குழந்தை பெற்று தரக்கோரியும் அப்பெண்ணின் கணவர் கொடுமைப்படுத்தியுள்ளதாக அப்பெண் தற்கொலை வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, அந்தப்பெண்ணுக்கு ஏன் சரியான நேரத்தில் உதவி செய்யப்படவில்லை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் பலர் அப்பெண்ணின் இரண்டு மகள்கள் தவறான தந்தையின் காவலில் உள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அப்பெண் அவரது தற்கொலை வீடியோவில் கூறியதாவது, “ரொம்ப வருத்தமாக இருக்கு. கடந்த 8 வருஷமா அடி வாங்கிட்டு இருக்கேன். தினமும் அடிபடுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவன் என்னை பைத்தியமாக்கிவிட்டான். இனிமே பொறுத்துக்க முடியாது. அப்பா நான் சாகப்போறேன். தயவுசெய்து என்னை மன்னியுங்கள்," எனக் கூறியுள்ளார். இவ்வாறு வீடியோவில் பேசிய பெண் உத்தரபிரதேசத்தைச்சேர்ந்த 30 வயதான மன்தீப் கவுர்.

மன்தீப் கவுர் அவரது இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். மேலும் தகவலின் படி, மன்தீப் கவுர் 2015இல் ரஞ்சோத்பீர் சிங் சந்து என்பவரைத் திருமணம் செய்தார். அதன் பிறகு அவர்கள் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். சந்து ஒரு டிரக் டிரைவராக உள்ளார். இவர்கள் நியூயார்க்கில் உள்ள ரிச்மண்டில் வசித்து வந்தனர்.

  • There are collosal problems in our family & social structure which we conveniently ignore or deny to accept. #DomesticViolence against women is one such serious problem. Suicide by Mandeep Kaur a NRI Punjabi woman is a wake up call to accept the problem and fix it accordingly. pic.twitter.com/F8WpkiLCZY

    — Gurshamshir Singh (@gurshamshir) August 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பல ஆண்டுகளாக மன்தீப் கவுர் அவரது கணவரால் கொடுமைக்கு ஆளாகியிருப்பதாகவும், தனது கணவருக்கு திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு இருப்பதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார். சந்து மன்தீப்பை அடித்து துன்புறுத்திய பல வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. அத்தகைய ஒரு வீடியோவில், மன்தீப் கவுர் அடிக்கும்போது, தங்கள் தாயை அடிக்க வேண்டாம் இரண்டு மகள்களும் தந்தையான சந்துவிடம் கெஞ்சுகின்றனர். இருப்பினும் சந்து அவரது கழுத்தை நெரிக்க முயற்சிக்கிறார்.

ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில், நெட்டிசன்கள், குறிப்பாக சீக்கியர்கள் மற்றும் பஞ்சாபி புலம்பெயர்ந்தோர், #JusticeForMandeep என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவரின் இறப்புக்கு பல சீக்கிய அமைப்புகளும் எதிர்குரல் தெரிவித்து வருகின்றனர். அவரின் பெண் குழந்தைகளை உடனே மீட்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க:வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் பெண் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.