ETV Bharat / bharat

இஸ்ரேல் - பாலஸ்தீனிய போர் எதிரொலி: சிறுவன் கொலை; பெண் படுகாயம்.. வீட்டு உரிமையாளர் கைது!

Israel-Hamas hate crime: இஸ்ரேல் பாலஸ்தீனிய போர் எதிரொலியால் சிகாகோ நகரில் சிறுவன் மற்றும் பெண் ஆகியோர் வீட்டு உரிமையாளரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Israel Hamas hate crime
இஸ்ரேல் பாலஸ்தீனிய போர் எதிரொலி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 4:57 PM IST

Updated : Oct 16, 2023, 9:15 PM IST

சிகாகோ: சிகாகோவிலிருந்து சுமார் 40 மைல் தொலைவில் உள்ள ப்ளைன்ஃபீல்ட் டவுன்ஷிப்பின் இணைக்கப்படாத பகுதியில் உள்ள வீட்டில் பலத்த காயங்களோடு பெண் மற்றும் சிறுவனை அதிகாரிகள் மீட்டனர். என்று வில் கவண்டி ஷெரிப் அலுவலகம் சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

அதன்படி, ‘பலத்த காயமடைந்த சிறுவன் மற்றும் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அதிகாரிகள் அனுமதித்தனர். அப்போது இருவரின் உடலை மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்ததில் சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

பெண்ணிற்குப் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதாகவும் முறையான சிகிச்சை அளித்தால் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது எனவும் மருத்துவர்கள் கூறினர். பின், சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. பரிசோதனையில் சிறுவன் பலமுறை ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளான் என தெரிய வந்தது.

மேலும், தாக்குதலில் பாதிக்கப்பட்ட இருவரும் முஸ்லீம்கள். இந்த இருவரையும் குறிவைத்துத் தாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து வில் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின் படி அந்த பெண் 911 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தன் வீட்டு உரிமையாளர் தன்னை தாக்குவதாகக் கூறி உள்ளார். பின், அவரிடம் தொடர்ந்து சண்டை போட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பகுதியில் அதிகாரிகள் விசாரிக்கையில் சந்தேகிக்கப்படும் நபர் இருந்ததாகவும், அவரை விசாரிக்கையில் அவர் ஜோசப் என்பதும் சிறுவன் மற்றும் பெண்ணை தாக்கி உள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

உடனடியாக அதிகாரிகள் ஜோசப் மீது கொலை முயற்சி, கொடிய ஆயுதம் கொண்டு தாக்குதல், போன்ற வழக்குகளைப் பதிவு செய்தனர். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அதிகாரிகள் காத்திருந்தனர். இறந்து போன இருவரின் பெயர்களை அதிகாரிகள் வெளியிட விரும்பவில்லை.

ஆனால் சிறுவனின் மாமா அமெரிக்கச் செய்தி மாநாட்டில் சிறுவனின் பெயரைக் குறிப்பிட்டார். இறந்து போன பெண் சிறுவனின் தாய் எனவும் அடையாளம் காணப்பட்டது. தொடர்ந்து கூறுகையில்,"நாங்கள் விலங்குகள் அல்ல, நாங்கள் மனிதர்கள். மக்கள் எங்களை மனிதர்களாகப் பார்க்க வேண்டும்.

எங்கள் உணர்வுகளை மதிக்க வேண்டும் மனிதர்களாக எங்களைக் கையாள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று சிறுவனின் மாமா கூறினார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியத்திற்கு இடையே நடக்கும் போராட்டத்தின் எதிரொலியால் தாய் மற்றும் சிறுவன் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:Israel - Hamas conflict : ஹாமாஸ் விமான படை தளபதி கொலை? - இஸ்ரேல் பாதுகாப்பு படை!

Last Updated : Oct 16, 2023, 9:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.