உத்தர கன்னடா: கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம், டோட்மனே கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத ஹஸ்லர் (24). மதுப் பழக்கத்திற்கு அடிமையான இவர் நேற்று (அக். 13) இரவு தனது தாய், தங்கையிடம் சாம்பார் நன்றாகச் செய்யவில்லை எனக் கூறி சண்டையிட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த இளைஞர், தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து தாய், தங்கையை நோக்கிச் சுட்டுள்ளார். இதில் தாய் பார்வதி நாராயணா ஹஸ்லர் (42), தங்கை ரம்யா நாராயணா ஹஸ்லர் (19) உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தின்போது அவர்களது தந்தை வீட்டில் இல்லை என்று தெரிகிறது. தந்தை, மகன் மஞ்சுநாத ஹஸ்லர் மீது சித்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து காவல் துறையினர் மஞ்சுநாத ஹஸ்லரை கைதுசெய்துள்ளனர்.
இதையும் படிங்க: மாமல்லபுரத்தில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு