மேற்குவங்கம்: மேற்குவங்க மாநிலம், ஜல்பைகுரியைச் சேர்ந்த பட்டாச்சார்யா என்பவருக்கு சிறுவயது முதலே வலது கண்ணில் பார்வை இல்லை. பிறப்பிலேயே லேசான பார்வை குறைபாடு இருந்ததாகவும், அவர் பள்ளிப்பருவங்களில் மின்சார வசதி இல்லாமல் விளக்கு வெளிச்சத்தில் படித்ததால் அவரது வலது கண் பார்வை முழுவதும் பறிபோனதாக தெரிகிறது.
இப்போது அவர் பத்திரிகையாளராக இருப்பதாகத் தெரிகிறது. வளர்ந்த பிறகு பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மருத்துவர்களை அணுகி, பார்வையை மீட்க முயற்சித்துள்ளார். ஆனால், எதுவும் அவருக்குப் பலனளிக்கவில்லை.
இந்த நிலையில், சுமார் 54 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டாச்சார்யாவுக்கு வலது கண் பார்வை மீண்டும் கிடைத்துள்ளது. கடந்த 5-ம் தேதி சிலிகுரியில் உள்ள கிரேட்டர் லயன்ஸ் மருத்துவமனையில், கண் மருத்துவர் குவாசி ஆலம் நையாரிடம் சிகிச்சை எடுத்துள்ளார். சிறிய கண்புரை அறுவை சிகிச்சை மூலம் பட்டாச்சார்யாவுக்கு மீண்டும் பார்வை வந்துள்ளது. இதனை தன்னால் நம்ப முடியவில்லை என பட்டாச்சார்யா மகிழ்ச்சியுடன் கூறினார்.
இதுதொடர்பாக பேசிய மருத்துவர் குவாசி ஆலம் நையார், "அவரது கண்கள் பலவீனமாக இருந்தன. சிறுவயதிலேயே அவருக்கு வலது கண்ணில் கண்புரை நோய் ஏற்பட்டுள்ளது. இதுமட்டும்லாமல் இரண்டு கண்களிலும் வேறு வேறு பார்வை அளவுகள் இருந்தன. NISO Metropia மூலம் அவரது பார்வை அளவுகளை சரிசெய்தோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: ஐந்து ஆண்டுகள் ரயில்வேயிடம் போராடி ரூ.35ஐ திரும்பப் பெற்ற பொறியாளர்!