ராஜஸ்தான்: பிவாடியைச் சேர்ந்த அஜித் சிங், சுமன் என்ற பெண்ணை 9 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், அண்மைக்காலமாக சுமன், தன் பெயரில் வீடு வாங்கி தரச்சொல்லி தினமும் கணவரை வற்புறுத்தி உள்ளார்
கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தினம்தோறும் தாக்கியுள்ளார் சுமன். அடிக்கடி இரும்புக்கருவிகளாலும் கூட இரக்கமில்லாமல் அடித்து வந்ததாக கூறப்படுகிறது. பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் அஜித் சிங், ’எங்கு இதை வெளியே சொன்னால் அது மாணவர்களிடம் மீது எதிர்மறையான விளைவை ஏற்படுத்துமோ’ எனக் கருதி கண்ணியத்தை தக்க வைத்துக் கொள்ள, மனைவியின் அத்துமீறலைப் பொறுத்துக் கொண்டார். இது அவரது மனநிலையையும் பாதித்துள்ளது.
ஒரு கட்டத்தில் மனைவியின் அட்டூழியங்கள் எல்லை மீற சிசிடிவி ஆதாரங்களைக்கொண்டு மனைவி சுமனுக்கு எதிராகவும், அவரிடம் இருந்து பாதுகாப்பு கேட்டும் வழக்குத் தொடர்ந்துள்ளார். மேலும் சுமன், அமெரிக்காவில் உள்ள அவரது சகோதரரால் தூண்டப்பட்டு இவ்வாறு செய்வதாகவும் அஜித் சிங் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அஜித் சிங்கிற்கு பாதுகாப்பு வழங்கவும், இது குறித்து காவல்துறை விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: விஸ்மயா வழக்கு: கணவர் கிரண் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!