ETV Bharat / bharat

'ஒரே மேடை.. இரு காதலிகளுடன் திருமணம்..' - சாமர்த்தியசாலியான 90’ஸ் கிட்ஸ் - Man married with two women same stage

90ஸ் கிட்ஸ்களில் பலர், இலவு காத்த கிளிப் போல திருமணத்திற்காக காத்து கிடக்கின்றனர். இது குறித்தான மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் நாம் பார்த்து ரசித்திருப்போம். ஆனால் யோகக்கார 90ஸ் கிட்ஸ் ஒரே மேடையில் இருவரை மணமுடித்துள்ளார்.

சாமர்த்திய சாலியான 90ஸ் கிட்ஸ்
சாமர்த்திய சாலியான 90ஸ் கிட்ஸ்
author img

By

Published : Jun 19, 2021, 10:20 AM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், அதிலாபாத் மாவட்டம், கான்பூரைச் சேர்ந்தவர், அர்ஜூன்(27). ஆசிரியர் பயிற்சியை முடித்த அவர் பள்ளிகள் திறக்கப்படாததால் வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

தனது சொந்த மாமன் மகள்கள் இருவரிடமும் அடிக்கடி போன் பேசி பொழுதைக் கழித்த அர்ஜூன் ஒரே நேரத்தில் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவரைக் காதலித்துள்ளார். அவர்களில் ஒருவர் கான்பூர் கிராமத்தைச் சேர்ந்த உஷாராணி (23), மற்றொருவர் ஷம்புகுதேம் (Shambhugudem) கிராமத்தைச் சேர்ந்த சூர்யகலா (21) ஆவார்.

ஒரே மேடையில் இரு காதலிகளுடன் திருமணம்

இருவரையும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த அர்ஜூனின் திருமணத்திற்கு முதலில் அவர்களது பெற்றோர் சம்மதிக்கவில்லை. ஆனால், உஷாராணியும் சூர்யகலாவும் திருமணமென்றால், "அது மாமன் அர்ஜூனோடுதான்" என்று ஒற்றைக் காலில் நின்றுள்ளனர். வேறு வழியில்லாமல் பெற்றோர்களும் இவர்களது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

மணமக்கள்
மணமக்கள்

இவர்களது திருமணம் உற்றார், உறவினர்கள் சூழ பழங்குடியினப் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. மணமகன் அர்ஜூன் ஒரே மேடையில் வைத்து இருவருக்கும் தாலி கட்டினார்.

பழங்குடியின சமூக வரலாற்றில் ஒருவர் இரு பெண்களை, ஒரே மேடையில் மணமுடிப்பது இதுவே முதல் முறையாகும் என்று அவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

காதலிகளோடு மணமகன்
காதலிகளோடு மணமகன்

பெரும்பாலானோர் வெவ்வெறு காலங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களைக் காதலிப்பர். ஆனால், அர்ஜூன் ஒரே நேரத்தில் இரண்டு பேரையும் காதலித்து அவர்களை ஒரே மேடையில் வைத்து திருமணமும் செய்துள்ளார். அந்த வகையில் அர்ஜூன் யோகக்கார 90ஸ் கிட்ஸ் தான் போலும்.

இதையும் படிங்க: 'சோசலிசத்துடன் இணைந்தார் மம்தா பானர்ஜி'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.