ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் பட்ஸோடா காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில், கடந்த செவ்வாய்க்கிழமை இளைஞர் ஒருவரை இரண்டு பேர் கட்டி வைத்து, அடித்து துன்புறுத்தியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
வீடியோவில் தன்னை தாக்குபவர்களிடம் இளைஞர் கெஞ்சுகிறார். ஆனால், அவர்கள் அதை பொருட்படுத்தாது மீண்டும் மீண்டும் அடிக்கின்றனர். அந்த இளைஞர் உதய்பூர் மாவட்டம் பிந்தர் பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவர் ஆவார்.
தற்போது அஜய் பலத்த காயங்களுடன் உதய்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். அஜய்யின் குடும்பத்தினர் பிந்தர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் ஜூரோ எஃப்ஐஆரின் கீழ் வழக்குப்பதிவு செய்து வழக்கை பட்ஸோடா காவல் நிலையத்திற்கு மாற்றினர்.
இந்நிலையில் ராஜு, பசந்திலால், ராமேஸ்வர் ஆகியோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: சம்மன் கொடுக்கச் சென்றவர் மீது சரமாரி தாக்குதல்.. செருப்பால் அடித்து சித்ரவதை..