ETV Bharat / bharat

கேதர்நாத் கோயிலுக்குள் நாயுடன் சென்ற பிரபலம் - உத்தரகாண்ட்

கேதர்நாத் கோயிலுக்குள் நாயுடன் சென்ற சமூக வலைதள பிரபலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Man booked
Man booked
author img

By

Published : May 21, 2022, 7:07 PM IST

உத்தரகாண்ட்: நொய்டாவை சேர்ந்த சமூக வலைதள பிரபலமான விகாஸ் என்ற நபர், தனது சைபீரியன் ஹஸ்கி நாயுடன் கேதர்நாத் கோயிலுக்குள் சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், விகாஸ் கோயிலின் முன்பு இருந்த நந்தி சிலை மீது நாயின் முன்னங்கால்களை தொட வைத்துள்ளார். அதோடு அங்கிருந்த பூசாரி ஒருவர் நாய்க்கு திலகம் இட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதையடுத்து, சமூக வலைதளங்களில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த வீடியோ மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கோயில் நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கோயில் வளாகத்தில் நாயுடன் சுற்றிய விகாசை தேடி வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்றும், கோயில் வளாகத்திற்குள் யாரேனும் ற தேவையற்ற செயல்களில் ஈடுபட்டால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோயில் நிர்வாக கமிட்டியின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ராஜிவ் காந்தி நினைவு தினம்: பிரதமர் மோடி, சோனியா, பிரியங்கா மரியாதை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.