அகமதாபாத்: குஜராத் மாநிலம் மெஹ்சனா மாவட்டத்தில் உள்ள லஷ்மிபுரா கிராமத்தில், ஜஸ்வந்த்ஜி (40) என்பவர், கடந்த 4ஆம் தேதி தனது சகோதரர் அஜித்துடன் சேர்ந்து, வீட்டின் அருகே இருந்த சிறிய கோயிலில் பூஜை செய்துள்ளார்.
அப்போது கோயிலில் ஒலிபெருக்கியை பொருத்தி பக்தி பாடல்களை ஒலிக்கச் செய்துள்ளனர். இதைக் கண்ட அவர்களது சுற்றத்தார், தொந்தரவாக இருப்பதாகக் கூறி ஒலிபெருக்கியை கழற்றும்படி அறிவுறுத்தியுள்ளனர். ஒலிபெருக்கியின் சத்தம் மிகவும் குறைவாகவே இருப்பதால், அகற்ற முடியாது என ஜஸ்வந்த்ஜி கூறியதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டதில், சுற்றத்தார் அனைவரும் சேர்ந்து ஜஸ்வந்த்ஜியையும், அவரது சகோதரரையும் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஜஸ்வந்த்ஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக ஜஸ்வந்த்ஜியின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதல் நடத்திய 6 பேரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: பணத்திற்காக தம்பதியை கொன்று பண்ணை வீட்டில் புதைத்த நேபாள கார் ஓட்டுநர்!