மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறித்து காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு என்ற முழக்கத்தை நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்துவருகின்றன.
பாஜக எதிர்ப்பில் தீவிரம் காட்டும் மம்தாவை பலரும் பிரதமர் மோடிக்கு எதிராக முன்னிறுத்த முயற்சி நடைபெறுகிறது. இதற்கு காங்கிரஸ் மக்களவைத் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.
மம்தா பானார்ஜி குறித்து அதிர் ரஞ்சன் சௌத்ரி கூறியதாவது, "மம்தா பானர்ஜி நம்பத் தகுந்த கூட்டாளி அல்ல. தனக்கு உணவளித்த கையையே கடிக்கும் பண்பு கொண்டவர் அவர்.
மம்தா பாஜகவின் ட்ரோஜன் குதிரை(trojan horse). எனவே, பாஜகவை அவரை நம்பி எதிர்க்க முடியாது. தன்னையும் தனது குடும்பத்தினரையும் சிபிஐ, அமலாக்கத்துறை பிடியிலிருந்து விடுவிக்க பிரதமர் மோடியை அவர் அனுசரித்து செல்கிறார். பாஜகவின் லட்சியமான காங்கிரஸ் இல்லா இந்தியாவை உருவாக்க மம்தா துணை செல்கிறார்.
தனது கூட்டாளியை முதுகில் குத்தும் பண்பு கொண்டவர் மம்தா. பிரதமர் ஆகலாம் என்ற கனவில் மம்தா மிதக்கிறார். காங்கிரஸ் இருக்கும்வரை அந்த கனவு பலிக்காது" என்றார்.
இதையும் படிங்க: Viral Video சிறுத்தையை கைத்தடியால் அடித்து விரட்டிய வீரப்பெண்