கொல்கத்தா (மேற்குவங்கம்): இதுதொடர்பாக மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களில் தரமான தூய கோபிந்தோபோக் அரிசி விளைகிறது. இதற்கு 2017ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று புவி சார் அடையாளமும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க முயற்சித்து வருகிறோம். முக்கியமாக கோபிந்தோபோக் அரிசி உற்பத்தியை அதிகளவில் ஊக்குவித்து வருகிறோம். ஏனென்றால், இந்த கோபிந்தோபோக் அரிசி உள்நாடு மட்டுமல்லாமல், ஐரோப்பா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், கத்தார், பஹ்ரைன், குவைத் உள்பட பல்வேறு வளைகுடா நாட்டு மக்களுக்கு அதிகளவில் தேவைப்படுகிறது.
இதனால் இங்கு விளையும் கோபிந்தோபோக் அரிசி வெளிநாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு அரிசி மீது 20% சுங்க வரியை கடந்த செப்டம்பர் 8 அன்று விதித்தது. இதனால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பாஸ்மதி அரிசிக்கு அளிக்கப்பட்டுள்ள வரி விலக்கைப் போல, கோபிந்தோபோக் அரிசிக்கும் சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசியல் இல்லை - மம்தாவைச் சந்தித்தபின் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி