ETV Bharat / bharat

ஆளுநர்களுக்கு எதிராக ஒன்றிணையும் முதலமைச்சர்கள் - முதலமைச்சர் ஸ்டாலினிடம் மம்தா கூறியது என்ன?

பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநர்களின் ஜனநாயக விரோதச் செயல்பாட்டிற்கு எதிராக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Mamata
மம்தா
author img

By

Published : Apr 20, 2023, 8:04 PM IST

கொல்கத்தா: தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுவதாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் திமுக அரசு தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதனிடையே கடந்த 10ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். இத்தீர்மானம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு மட்டுமல்லாமல், பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும், ஆளுநர்களுக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இதனால், ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றிய கையோடு, பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், அந்தந்த மாநில முதலமைச்சர்களும் ஆளுநர்களுக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். மாநில அரசுகள் மற்றும் சட்டமன்றங்களின் இறையாண்மை மற்றும் சுயமரியாதையை நிலைநிறுத்துவதற்கு மற்ற முதலமைச்சர்களும் இதேபோன்ற தீர்மானங்களைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் தங்களது ஆதரவினை தெரிவித்திருந்தனர். ஆளுநர்களின் செயல்பாடுகளை எதிர்ப்பதற்கு தாங்களும் ஒத்துழைப்பதாகத் தெரிவித்தனர். அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவருவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று(ஏப்.19) முதலமைச்சர் ஸ்டாலினை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, பாஜக அல்லாத பிற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் ஜனநாயக விரோதச் செயல்பாட்டிற்கு எதிரான தமிழ்நாடு அரசின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த முயற்சியில் தமிழ்நாடு அரசுக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாகவும், இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக, பாஜக அல்லாத பிற மாநில முதலமைச்சர்கள் கூடி விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அடிக் அகமது கொலைச் சம்பவம்: நீதி விசாரணைக்குழு முன் நடித்துக் காட்டிய புலனாய்வுக் குழுவினர்!

இதையும் படிங்க: RCB vs PBKS: சிராஜ் வேகத்தில் வீழ்ந்த பஞ்சாப்: 24 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி!

இதையும் படிங்க: சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு - கோவை விவசாயிகள் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.