பங்குரா: மேற்கு வங்கத்தின் பங்குராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியதாவது:-
கடந்த முறை பாஜகவுக்கு வாக்களித்தவர்களிடம், நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன்: ஒவ்வொரு கணக்கிற்கும் பாஜக ரூ.15 லட்சம் கொடுத்ததா? மேலும், தேர்தல் நேரத்தில் பாஜகவினர் அரிசி மற்றும் பருப்பு தருவதாக தவறான வாக்குறுதிகளை அளித்து உங்கள் வாக்குகளை எடுத்துச் செல்கிறார்கள்.
ஆனால் மம்தா பானர்ஜி அரசாங்கம் சொல்வதை செய்கிறது. பாங்குராவில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இடஒதுக்கீடு என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
ஆனால் இதனை எனது அரசாங்கம் ஏற்கனவே நிறைவேற்றி விட்டது. நாங்கள் கிராமம், நகராட்சியில் பெண்களுக்கு 50 விழுக்காடு முன்னுரிமை அளித்துள்ளோம்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
294 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டசபைக்கான தேர்தல்கள் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை எட்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறுகிறது.