ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தார் என்ற பகுதியில் சாலையோரம் அடையாளம் தெரியாத வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அந்த வாகனத்தை சோதனை செய்தனர்.
அப்போது, அந்த வாகனத்தில் IED வெடிபொருள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவயிடத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் அதை செயலிழக்க செய்தனர்.
இதையடுத்து, அங்கு ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக பூஞ்ச் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் அங்கரல் தெரிவித்துள்ளார். அந்த வாகனங்களிலிருந்து தடயங்களை சேகரித்துக் கொண்டு காவல்துறையினர், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மூன்றாம் பாலினத்தவருக்கு பிரத்தியேக அடையாள அட்டை; முன்னுதாரணமாக திகழும் மத்தியப் பிரதேசம்