ETV Bharat / bharat

பா.ஜ., கட்சியில் தொடரும் அதிரடி: மேலும் 4 மாநில கட்சி தலைமைகளை மாற்ற திட்டம்! - கட்சி தலைவர்

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநிலங்களின் கட்சி தலைமைகள் மாற்றப்பட்டு உள்ள நிலையில், மேலும் ம.பி., கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களின் கட்சி தலைமைகளை மாற்ற கட்சி மேலிடம் திட்டமிட்டு உள்ளது.

Major shake ups: BJP likely to change state chiefs in four more states
பா.ஜ., கட்சியில் தொடரும் அதிரடி: மேலும் 4 மாநில கட்சி தலைமைகளை மாற்ற திட்டம்!
author img

By

Published : Jul 6, 2023, 1:44 PM IST

டெல்லி: நடப்பு (2023) ஆண்டின் இறுதியில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தெலங்கானா, பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் கட்சி தலைமைகளை, பாரதிய ஜனதா கட்சி மேலிடம், சமீபத்தில் மாற்றி அமைத்து இருந்தது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 4 மாநிலங்களின் கட்சி தலைமைகளில் மாற்றம் மேற்கொள்ள கட்சி மேலிடம் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்து உள்ளதாவது, கட்சி மேலிடம், கடந்த ஒரு மாதமாக தொடர் கூட்டங்களை நடத்தி வருகின்றன. கட்சி மற்றும் மாநிலங்களில் ஒற்றுமையை முன்னிறுத்தவும், ஜாதிப் பிரதிநிதித்துவம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அதிகாரத்தை சமநிலைப்படுத்தவும் அமைப்பு மாற்றங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், எதிர்காலத்தில் அமைச்சரவை மாற்றங்களையும் ஏற்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த ஓரிரு நாட்களில், கூடுதலாக 5 மாநிலங்களுக்கான புதிய தலைமைகளை, பாரதிய ஜனதா கட்சி அறிவிக்க உள்ளதாக, முக்கிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. பலவீனமான லோக்சபா தொகுதிகளுக்கு வியூகம் அமைக்கும் பணி, பல அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

பாரதிய ஜனதா கட்சி மேலிடத்தை, மத்திய அமைச்சர்கள் பிரகலாத் படேல், ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்ட அமைச்சர்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேச மாநிலத்தின் கட்சி தலைவராக, பிரகலாத் படேல் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக, ஊகங்கள் பரவி வருகின்றன. கடந்த 2018ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு சில காலம் முன்னரே, பிரகலாத் படேல், கட்சி தலைவராக நியமிக்கப்பட்டு இருந்த நிலையில், அக்கட்சி, மாபெரும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலுங்கானா மாநில கட்சி தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், மேலும், பல்வேறு அமைச்சர்களுக்கு மாநில பொறுப்புகள் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டசபைத் தேர்தல்களில், பாஜ கட்சி, தனது எம்.பி.க்களை அடிக்கடி களமிறக்குவது, அக்கட்சியின் வழக்கமாகவே உள்ளது. பெரும்பாலான அமைச்சர்கள், 2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று எதிர்பார்த்து உள்ள நிலையில், . பொதுவாக, மத்திய அமைச்சர்கள் மாநிலத் தலைவர் பதவியை வகிக்கும் போது, தங்கள் இலாகாக்களை தக்க வைத்துக் கொள்ள கட்சி அனுமதிப்பது இல்லை.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்காக, பாரதிய ஜனதா கட்சி தயாராகி வரும் நிலையில், அரசியல் கணக்கீடுகள், சமூகப் பொறியியல், ஜாதிப் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துதல், கூட்டணிகளை வலுப்படுத்துதல், அனைத்திற்கும் மேலாக கட்சிக்குள் ஒற்றுமையையும் திருப்தியையும் பேணுதல் உள்ளிட்ட உத்திகளை சுற்றியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்களது இலக்கை எட்ட, கட்சி உறுப்பினர்களிடமிருந்து, அதிகப்படியான உழைப்பை, கட்சி அறுவடை செய்ய நினைக்கிறது. மாநில அளவில், சமீபகாலமாக மேற்கொண்டு வரும் மாற்றங்கள் கூட, இந்த உத்திகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில், பாஜக அடைந்த தோல்வி, நடப்பு ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களுக்கான பிரச்சார அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய அக்கட்சியைத் தூண்டி உள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய நான்கு முக்கியமான மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் மட்டுமே பாஜக ஆட்சியில் உள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில், ஆளும் ஆட்சிக்கு எதிரான உணர்வுகளைப் பயன்படுத்திக் கொள்வதைக் கட்சி முக்கிய நோக்கமாகக் கொண்டு உள்ளது.

2024இல் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு முன்பாக, கட்சியின் நிலையை வலுப்படுத்துவதற்காக, கடந்த மாதம் பாஜக , ஒரு மாத கால அளவிலான, மக்கள் சந்திப்பு மற்றும் ஆலோசனை நிகழ்ச்சிகளை நடத்தியது. மத்திய அமைச்சர்கள் மற்றும் அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் இந்த நிகழ்வுகளில் தீவிரமாக பங்கேற்றனர், இது ஆளும் கட்சிக்கு ஆதரவைப் பெறுவதற்கும், நாடு முழுவதும் அதன் இருப்பை உறுதிப்படுத்துவதற்கும் ஒரு முக்கிய தளமாக நடத்தப்பட்டது என்றே கூற வேண்டும்.

எப்படியோ, மற்ற கட்சிகள் கூட்டாக ஆங்காங்கே கூடி கூட்டணியை அமைக்க முனைப்பு காட்டி வரும் நிலையில், பாஜக, தேர்தல் ஆயத்த வேலைகளை முன்கூட்டியே துவக்கி உள்ளது. வெற்றியை, மக்கள் யாருக்கு அளிக்க உள்ளார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!!!

இதையும் படிங்க: பழங்குடி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: பாதிக்கப்பட்டவரின் கால்களைக் கழுவி கவுரவித்த ம.பி. முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.