அருணாச்சலப் பிரதேசத்தின் டூட்டிங்கில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (அக் 21) அன்று புறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர். இதில் உத்திரப் பிரதேச மாநிலம் உதய்பூர் ஹதிபோலைச் சேர்ந்த ராணுவ மேஜர் முஸ்தபா போஹ்ராவும் உயிரிழந்தார்.
சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ லெப்டினண்டாக இருந்த அவர், பின்னர் ராணுவ கேப்டனாகவும், தற்போது மேஜராகவும் பணியாற்றி வந்தார். வரும் ஏப்ரல் மாதத்தில் பாத்திமா என்ற பெண்ணுடன் முஸ்தபாவுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில்தான் முஸ்தபாவின் வீர மரணம் நிகழ்ந்துள்ளது.
அருணாச்சலில் இருந்து உதய்பூரில் தபோக் விமான நிலையத்திற்கு வந்த மேஜர் முஸ்தபாவின் உடல், காஞ்சிபீரில் உள்ள மசூதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. ராணுவ மரியாதையுடன் நிகழ்ந்த மேஜர் முஸ்தபாவின் இறுதிச் சடங்கில், அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.
முன்னதாக ஹெலிகாப்டரில் பயணம் செய்வதற்கு முன்புதான், தான் மணக்க இருந்த பாத்திமா உடன் முஸ்தபா தொலைபேசியில் பேசினார் என்பது மனதை நெருக்கும் பதிவுகளில் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அருணாச்சலில் 12 ஆண்டுகளில் 8 ஹெலிகாப்டர் விபத்துகள்: 62 பேர் உயிரிழப்பு