தெற்கு டெல்லியின் லஜ்பத் நகரில் உள்ள சென்ட்ரல் மார்க்கெட்டில் இயங்கும் துணிக்கடையில் இன்று (ஜூன் 12) பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இது தொடர்பாக தீயணைப்புத் துறை அலுவலர்கள் பேசுகையில், “காலை 10.20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக அழைப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து 16 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
தொடர்ந்து தீயணைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. எதனால் தீ விபத்து ஏற்பட்டது என்னும் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை” என்றனர்.
இதையும் படிங்க : தனியார் தோல் தொழிற்சாலையில் தீ விபத்து