ETV Bharat / bharat

நிலவிற்கு மனிதனை அனுப்பி பூமிக்கு பாதுகாப்பாக கொண்டு வருவதே குறிக்கோள் - இஸ்ரோ தலைவர் சோமநாத் - G20 நாடு

ISRO chairman Somanath: மனிதனை சந்திரனுக்கு அனுப்பி பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வருவதே இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (ISRO) முக்கிய குறிக்கோளாக இருக்கிறது என இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவின் அடுத்தகட்ட நடவடிக்கைளை பகிர்ந்தார் சோமநாத்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 10:52 AM IST

கொல்கத்தா: தி குளோபல் எனர்ஜி பார்லிமென்டின் (GEP) 13வது கூட்டத் தொடர், கொல்கத்தா ஆளுநர் மாளிகையில் நேற்று (நவ.29) தொடங்கியது. இதில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறப்பான சாதனைகளைப் படைத்ததற்காக இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு, மேற்கு வங்காள ஆளுநர் சிவி ஆனந்த போஸ் '2023ஆம் ஆண்டிற்கான கவர்னர் சிறப்பு விருது' வழங்கினார்.

பின், கூட்டத்தொடரில் சந்திரயான் 3 வெற்றி குறித்து பேசிய சோம்நாத், இந்த விருது ஒன்றாக செயல்படுவதற்கான பலத்தை தருகிறது எனக் கூறி நன்றி தெரிவித்தார். பின், ஆளுநர் மாளிகையில் உள்ள ஸ்க்ரைப்சிடம் உரையாடுகையில், “எதிர்காலத்தில் இஸ்ரோவிற்கு பல முக்கியமான இலக்குகள் உள்ளது. ஆனால் முதன்மையான இலக்கு, ககன்யான் திட்டம்தான். சந்திரனுக்கு மனிதனை அனுப்பி, பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டு வருவதே எங்கள் குறிக்கோள்” என தெரிவித்தார்.

கூட்டத் தொடருக்குப் பின், இஸ்ரோவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சோம்நாத் , “வெற்றிக்குப் பின்னால் உள்ள கடுமையான உழைப்பை சந்திரயான் 3 வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இன்னும் சில காலங்களில் ஜி20 என்கிற செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது” என்றார். ஜி20 செயற்கைக்கோள் குறித்து, G20 அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார் என்பது குறிப்பிடதக்கது.

தொடர்ந்து அவர் பேசுகையில், “ஜி20 செயற்கைக்கோள் G20 நாடுகளின் நலனுக்காக மட்டுமல்லாமல், உலகிற்கே உதவப் போகிறது. அதன் அடிப்படையில்தான் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் அறிவியல், தொழில்நுட்பம், அமைதி மற்றும் உலகளாவிய விவகாரங்கள், சுற்றுச்சூழல், கலாச்சாரம் மற்றும் மனித வள மேம்பாடு ஆகியவை கவனிக்கப்படும்” என தெரிவித்தார்.

2010-இல் தொடங்கப்பட்ட தி குளோபல் எனர்ஜி பார்லிமென்ட் (GEP) ஒரு சர்வதேச அமைப்பாகும். லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் தி குளோபல் எனர்ஜி பார்லிமென்ட் சர்வதேச கூட்டத்தொடர்களை நடத்தியுள்ளது.

ஜீசஸ் வேர்ல்ட் விஸ்டம் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனத்தால் GEP ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுடன் (ECOSOC) ஆலோசனை அந்தஸ்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: சனாதன தர்மம் விவகாரம்; உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான அவமதிப்பு மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.