தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 74ஆவது நினைவு தினம் இன்று (ஜன.30) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
புதுச்சேரியில் கடற்கரை சாலையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தொடர்ந்து புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: மகாத்மா காந்திக்கு தலைவர்கள் ட்விட்டரில் அஞ்சலி!