சத்தீஸ்கர் மாநிலம் மகசமுண்ட் மாவட்டத்தில் உள்ள பலோடா பஜார் பகுதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலை வாங்கித் தருவதாக தலால் நிதி எனும் புரோக்கர் ஒருவர் 12 பேரை அழைத்து வந்துள்ளார். அவர்கள் அனைவருக்கும் வேலைவாங்கி கொடுத்துவிட்டு அவர் கிளம்பியுள்ளார்.
அதில் மகசமுண்ட் மாவட்டத்தில் இருந்து 9 தொழிலாளர்களும், பலோடா பஜார் மாவட்டத்தில் இருந்து மூன்று தொழிலாளர்களும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 2 மாதங்களுக்கு முன்னதாக நல்ல வேலை, நல்ல சம்பவம் என கூறி, தமிழ்நாட்டிற்கு தலால் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவருக்கு மட்டுமே தினக்கூலி வழங்கிவிட்டு இருவரிடம் வேலை வாங்கியுள்ளனர். அதேபோல் தொடர்ந்து அதிகநேரம் வேலை செய்ய வேண்டும் எனவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். பல நேரங்களில் குடும்பத்தினரிடம் பேசுவதற்கு அந்தத் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
பின்னர் இந்த சம்பவத்தை தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து அக்குடும்பத்தினர், தொழிலாளர்கள் வேலை செய்யும் நிர்வாகத்திடம் பேசி, அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நிவர் புயல்: பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற மக்களுக்கு ராகுல் வேண்டுகோள்!