இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலம்தான் நாட்டின் புதிய பாதிப்பு மையமாக உருவெடுத்துள்ளது. அம்மாநிலத்தில் நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்பு பதிவாகிவரும் நிலையில், நான்கு லட்சத்து 72 ஆயிரத்து 283 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 297 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 56 ஆயிரத்து 330ஆக உயர்ந்துள்ளது. கோவிட்-19 நிலவரம் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை ராஜேஷ் தோப்பே செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்ள புனே, மும்பை, நாசிக் ஆகிய பகுதிகளில் போர்கால அடிப்படையில் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுவருகின்றன.
மேலும் அரசிடம் தற்போது 14 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்புகள் உள்ளன. இவை அடுத்த மூன்று நாள்களில் தீர்ந்துவிடும் என்பதால், 40 லட்சம் கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். மத்திய அரசு முறையான ஒத்துழைப்பு தருகிறது. இருப்பினும் சூழலுக்கு தகுந்தாற்போல் தடுப்பூசி விநியோகத்தை விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்றார்.
இதையும் படிங்க: சிவசேனா எம்.எல்.ஏவுக்கு நெருக்கமான தொழிலதிபர் கைது