மும்பை: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையில் இரண்டு அடுக்கு பேருந்துகள் (double decker buses) இயங்கியது. ஆனால் சில ஆண்டுகளாக பேருந்துகளின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மும்பையில் இரண்டு அடுக்கு பேருந்துகள் (double decker buses) இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மும்பையில் ஏசி பொருத்தப்பட்ட 900 மின்சார இரண்டடுக்கு பேருந்துகள் (electric double decker buses) குத்தகையில் வாங்குவதற்கு ஒப்பந்தமிட்டுள்ளதாக அம்மாநில சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சிறந்த டபுள் டெக்கர், இப்போது எலக்ட்ரிகில் கொண்டுவரப்படவுள்ளது. முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும், நானும் மும்பையின் சின்னமான டபுள் டெக்கர் பேருந்துகளை புதுப்பிப்பதில் தனிப்பட்ட முறையில் ஆர்வமாக உள்ளோம். எங்களின் பரிந்துரையை மதித்த BEST குழுவின் தலைவர் ஆஷிஷ் செம்பர்க், ஜிஎம் லோகேஷ் சந்திரா மற்றும் BEST குழுவிற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
-
The BEST double-decker, now electric!
— Aaditya Thackeray (@AUThackeray) January 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
CM Uddhav Thackeray and I have been personally keen on reviving Mumbai’s iconic double-decker buses. pic.twitter.com/lQkjvKlVgh
">The BEST double-decker, now electric!
— Aaditya Thackeray (@AUThackeray) January 27, 2022
CM Uddhav Thackeray and I have been personally keen on reviving Mumbai’s iconic double-decker buses. pic.twitter.com/lQkjvKlVghThe BEST double-decker, now electric!
— Aaditya Thackeray (@AUThackeray) January 27, 2022
CM Uddhav Thackeray and I have been personally keen on reviving Mumbai’s iconic double-decker buses. pic.twitter.com/lQkjvKlVgh
மும்பையுடன், மின்சார பேருந்துகளை வாங்கும் மற்ற நகரங்களின் நகராட்சி ஆணையர்களிடம், முக்கிய சாலைகளின் வழித்தடங்களில் டபுள் டெக்கர் எலெக்ட்ரிக் பேருந்துகளை இயக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று ட்வீட் செய்திருந்தார்.
இது தொடர்பாக, BEST குழுவின் பொது மேலாளர் லோகேஷ் சந்திரா கூறுகையில், "மின்சார பேருந்துகள் வாங்குவதற்கு மகாராஷ்டிரா கிலீன் ஏர் திட்டத்தின் (Maharashtra Clean Air Project) கீழ் மாநில அரசு ஏற்கனவே ரூ.992 கோடியை BEST நிறுவனத்திற்கு அனுமதித்துள்ளது.
-
I thank BEST chairman @AshishChemburk1 ji, GM Lokesh Chandra ji, and the committee of BEST for honouring our suggestion.
— Aaditya Thackeray (@AUThackeray) January 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I thank BEST chairman @AshishChemburk1 ji, GM Lokesh Chandra ji, and the committee of BEST for honouring our suggestion.
— Aaditya Thackeray (@AUThackeray) January 27, 2022I thank BEST chairman @AshishChemburk1 ji, GM Lokesh Chandra ji, and the committee of BEST for honouring our suggestion.
— Aaditya Thackeray (@AUThackeray) January 27, 2022
மேலும் இந்த பணம் முதலில் இரட்டை அடுக்குகளை வாங்க பயன்படுத்தப்படும். இந்த ஆண்டு முதல் 225 டபுள் டெக்கர்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அடுத்த 225 பேருந்துகள் மார்ச் 2023 க்குள் வரும், மீதமுள்ள 450 பேருந்துகள் ஜூன் 2023 க்குள் வரும்" என்றார்.