மகாராஷ்டிரா அரசின் உள்துறை அமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனில் தேஷ்முக் உள்ளார். மும்பை காவல் ஆணையராக இருந்த பரம்வீர் சிங், 'உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மாதந்தோறும் நூறு கோடி ரூபாய் வசூல் செய்து தன்னிடம் கொடுக்கும்படி வற்புறுத்தியதாக' குற்றஞ்சாட்டி மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்று எழுதினார்.
இந்த விவகாரம் மகாரஷ்டிரா அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரை சந்தித்து புகார் மனுவை அளித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வாய்மூடி மௌனியாக இருக்கிறார். சரத் பவார் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை காப்பாற்றுவதிலேயே குறியாக உள்ளார்.
மகாராஷ்டிராவை ஆளும் தார்மீக உரிமையை மாகா விகாஸ் அகதி கூட்டணி அரசு இழந்துவிட்டது. இந்த விவகராத்தில் நேர்மையான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என ஆளுநரை வலியுறுத்தினேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: உயர் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள்: பரம்வீர் சிங்குக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு