ETV Bharat / bharat

அமித்ஷா பங்கேற்ற விழாவில் 14 பேர் பலியான சம்பவம் எதிரொலி - வெயிலில் நிகழ்ச்சிகள் நடத்த தடை! - வெயில் குறையும் வரை திறந்தவெளி நிகழ்ச்சி கூடாது

மகாராஷ்டிராவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற விழாவில், வெயிலின் தாக்கத்தால் 14 பேர் பலியான நிலையில், வெப்ப அலை குறையும் வரை பிற்பகல் முதல் மாலை 5 மணி வரை திறந்த வெளியில் நிகழ்ச்சிகளை நடத்த மகாராஷ்டிரா அரசு தடை விதித்துள்ளது.

Maharashtra
வெயில்
author img

By

Published : Apr 19, 2023, 7:50 PM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே உள்ள நவிமும்பையில், கடந்த 16ஆம் தேதி அம்மாநில அரசு சார்பில், "மகாராஷ்டிரா பூஷண்" விருது வழங்கும் விழா நடைபெற்றது. சமூக ஆர்வலர் அப்பாசாஹேப் தர்மதிகாரி என்பவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த விருதை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

பிரமாண்டமான மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாஜக தொண்டர்கள், சமூக ஆர்வலரின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. விஐபிகளுக்கு மட்டும் நிழல் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

மற்றவர்களுக்கு பந்தல் அமைக்கப்படாததால், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் திறந்தவெளியில் சுமார் 36 டிகிரி வெப்பநிலையில் அமர வைக்கப்பட்டனர். அதில், கோடை வெயிலின் தாக்கத்தால் 50-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். இவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இதில் 14 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டனர்.

மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில், 14 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் பலரும் பாஜகவை விமர்சித்திருந்தனர்.

இந்த நிலையில், கோடை வெயில் காரணமாக, பிற்பகல் முதல் மாலை 5 மணி வரையில் திறந்த வெளியில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் வெப்ப அலை குறையும் வரை இந்த தடை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: heatstroke: மகாராஷ்டிரா அரசு விழாவில் வெயில் தாக்கத்தால் 11 பேர் மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.