நாடு முழுவதும் கரோனா மூன்றாம் அலை, ஒமைக்ரான் தொற்று பரவல் வேகமாக பரவ தொடங்கியதையடுத்து பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. இந்தியாவிலும் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனபடி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மூன்று லட்சத்து ஆராயிரத்து 64 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில மாநிலங்களில் தொற்று பரவல் குறைய தொடங்கியுள்ளது. இதையடுத்து தொற்று பரவல் குறைந்த மாநிலத்தில் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் தற்போது 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கடந்த 8 ஆம் தேதி பள்ளிகளை மூட மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.