மும்பை: மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டம் மல்கேட் ரயில் நிலையம் அருகே நேற்றிரவு 11.20 மணியளவில் சரக்கு ரயிலின் 20 நிலக்கரி வேகன்கள் தடம் புரண்டதால், பல பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பல ரயில்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
இதன் காரணமாக 11122 வாரா-பூசாவல், 12140 நாக்பூர்-சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (சி.எஸ்.எம்.டி), 12119 அம்ராவதி-நாக்பூர், 11040 கோண்டியா-கோலார்பூர், 01372 12106 கோண்டியா-சிஎஸ்எம்டி, 12136 நாக்பூர்-புனே, 12120 அஜ்னி-அமராவதி, 12140 நாக்பூர்-சிஎஸ்எம்டி மற்றும் 01374 நாக்பூர்-வார்தா உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
சந்தூர் பஜார்-நார்கேட், நாக்பூர்-நார்கேட்-சந்தூர் பஜார்-பட்னேரா, வாடி-டவுண்ட்-மன்மட்-ஜல்கான், புசாவல்-கண்ட்வா-இடார்சி-நாக்பூர், டி அகோலா-செகந்திராபாத் உள்ளிட்ட ரயில்கள் மாற்று வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டன என்று மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கார் வெடி விபத்தில் இறந்தவர் வீட்டில் வெடிமருந்து...! எதிர்கால திட்டம் என்ன..!