சங்லி, சதாரா, ரத்னகிரி ஆகிய பகுதிகளுக்கு மருத்துவ குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களை சேர்ந்தவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர மருத்துவ சேவையையும், கரோனா குறித்த விழிப்புணர்வையும் 10 நாள்களுக்கு வழங்கும்.
கோலாப்பூர், ரெய்காட் போன்ற பகுதிகளுக்கு மருத்துவ சேவை வழங்க இந்த வாரம் கூடுதலாக இரண்டு குழுக்கள் அனுப்பப்படும்.
அமெரிக்கேர்ஸ் என்ற இந்த தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் கேட் திஸ்சினோ கூறுகையில், "மகாராஷ்டிராவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கானோரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக நிவாரண முகாம்களில் பல குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு நீரினால் ஏற்படும் நோய்களும், கரோனா நோய் தொற்றும் ஏற்பட வாய்ப்பு அதிகமுள்ளது. எங்கள் மருத்துவ குழுக்கள் அவசரகால முதன்மை மருத்துவ சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தும்" என்றார்.
நேற்றைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் இதுவரை 213 பேர் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ரெய்காட் மாவட்டத்தில் மட்டும் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர். 4 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 349 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஆழ்கடலில் தூய்மை பணி - 8 வயது சிறுமி அசத்தல்