ETV Bharat / bharat

முற்றும் மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி: இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள் - முற்றும் மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி

மகாராஷ்டிரா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிரான துணை சபாநாயகரின் தகுதி நீக்க நோட்டீஸ் முதல் ஏக்நாத் ஷிண்டே, பாஜக மாநிலத் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ரகசிய சந்திப்பு வரை இன்று (ஜூன் 26) நடந்த முக்கிய நிகழ்வுகளைக் காணலாம்.

முற்றும் மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி
முற்றும் மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி
author img

By

Published : Jun 26, 2022, 11:02 PM IST

Updated : Jun 26, 2022, 11:09 PM IST

மகாராஷ்டிரா அரசியலில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள்

  1. மகாராஷ்டிரா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக துணை சபாநாயகர் பிறப்பித்த தகுதி நீக்க நோட்டீஸை எதிர்த்து சிவசேனா எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சிவசேனா சட்டப்பேரவை கட்சி தலைவராக அஜய் சௌத்ரியை நியமித்ததையும் எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  2. மத்திய அரசு 15 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு Y+ பாதுகாப்பு வழங்கியது. அந்த வகையில், ரமேஷ் போர்னாரே, மங்கேஷ் குடல்கர், சஞ்சய் ஷிர்சாத், லதாபாய் சோனாவனே, பிரகாச் சர்வே, சதானந்த் சரனவ்ங்கர், யோகேஷ் தாதா கடம், பிரதாப் சர்நாயக், யாமினி ஜாதவ், பிரதீப் ஜெய்ஸ்வால், சஞ்சய் ரத்தோட், தாதாஜி பூசே, திலீப் கல்யாண் லாண்டே, பாலாஜி கல்யாண் லாண்டே, பூமாரே ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் கவுகாத்தியில் உள்ளனர்.
  3. மகாராஷ்டிரா சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே, "வெளியேற விரும்புபவர்களுக்கும், கட்சிக்குத் திரும்ப விரும்புபவர்களுக்கும்" கட்சியின் கதவுகள் திறந்திருப்பதாகவும், அதே நேரத்தில் துரோகிகளாக மாறிய அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு மீண்டும் இடம் கிடையாது என்று தெரிவித்தார்.
  4. மகாராஷ்டிரா மாநில உயர்கல்வி, தொழில்நுட்பக்கல்வித் துறை அமைச்சர் உதய் சமந்த், கவுகாத்தியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே தரப்பில் சேர்ந்தார். இப்போது அதிருப்தி எம்எல்ஏக்கள் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் உள்ளனர்.
  5. கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்யிருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக நாக்பூரில் சிவசேனா தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  6. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் மனைவியருடன் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தொலைபேசியில் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் கணவரிடம் பேசி அதிருப்தியை கைவிடச் செய்யுமாறு அவர் சமாதானப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
  7. முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அதிருப்தி எம்எல்ஏக்கள் சிவசேனா கட்சியின் பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இதற்குப் பதிலாக வாக்குகளைப் பெற தங்களது தந்தையின் பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்று கடுமையாக விமர்சித்தார்.
  8. சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்யிருக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள் குறித்து ட்வீட் செய்தார். அதில், "எவ்வளவு காலம் நீங்கள் கவுகாத்தியில் இருப்பீர்கள்? நீங்கள் ஒரு நாள் சௌப்பட்டிக்கு திரும்பி வந்துதான் ஆக வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
  9. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தவ் தாக்கரேவை செல்போனில் அழைத்து, காங்கிரஸின் முழு ஆதரவு அளிக்கும் என்று உறுதியளித்தார். காங்கிரஸ் தலைவரும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத், 44 காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன், தாக்கரேவுக்கு தனது முழு ஆதரவையும் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
  10. ஏக்நாத் ஷிண்டே கவுகாத்தியிலிருந்து நள்ளிரவில் விமானம் மூலம் வதோதராவுக்கு சென்று பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸை சந்தித்தார். நான்கு மணி நேரம் கழித்து திரும்பினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நேற்றிரவு வதோதராவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட யோகி ஆதித்யாநாத் ஹெலிகாப்டர் - இதுதான் காரணமா?

Last Updated : Jun 26, 2022, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.