மகாராஷ்டிராவில் 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஆன்லைனில் நடைபெறாது என மாநில கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், நேரடியாகத் தேர்வு மையத்திற்குச் சென்றுதான் எழுத வேண்டும். அவரவர் பள்ளிகளிலே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. எழுத்துத் தேர்வு முடிந்ததும், பிராக்டிக்கல் தேர்வுகள் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக வெளியான தகவலின்படி, 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வரும் ஏப்ரல் 23 முதல் மே 21ஆம் தேதி வரையும், 10ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 29 முதல் மே 20ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு குறித்து பாஜக குற்றப்பத்திரிகை வெளியீடு