ETV Bharat / bharat

Maha Shivratri: மகா சிவராத்திரி வரலாறு கூறுவது என்ன?

author img

By

Published : Feb 18, 2023, 10:43 AM IST

மகா சிவராத்திரியின் வரலாறு பல்வேறு காலக்கட்டங்களில் பல தரப்பட்ட புராணங்களின்படி வரையறுக்கப்பட்டுள்ளது.

maha shivratri: மகா சிவராத்திரி வரலாறு கூறுவது என்ன?

சென்னை: படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களைக் கொண்ட பிரம்மன், விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூவரும்தான் உலகை ஆட்சி செய்து வருகின்றனர் என்பது இந்து மத புராணங்களிலும், இந்து மத பின்பற்றாளர்களிடமும் உள்ள நம்பிக்கை. இவர்களில் பிரம்மன் மற்றும் விஷ்ணு ஆகிய இருவருக்கும் திடீரென ஒரு கலியுக போட்டி வந்துள்ளது.

அது, ‘நம்மில் யார் பெரியவர்’ என்பதுதான். இந்த போட்டி சண்டையாக மாற, சிவபெருமான் குடி கொண்டிருப்பதாகக் கூறப்படும் கைலாய மலைக்கு இருவரும் செல்கின்றனர். இதனைக் கேட்டறிந்த சிவபெருமான், ‘எனது தலை உச்சி மற்றும் அடிப்பாதம் ஆகிய இரண்டையும் யார் கண்டு வருகிறீர்களோ அவர்களே பெரியவர்’ என ஒரு போட்டியை வைக்கிறார்.

இதனையடுத்து சிவனின் அடிப்பாதத்தை நோக்கி விஷ்ணுவும், தலை உச்சியை நோக்கி பிரம்மனும் பயணிக்கத் தொடங்குகின்றனர். பூமிக்கு அடியில் எவ்வளவு ஆழமாகச் சென்றாலும் சிவனின் அடிப்பாதத்தைக் கண்டறிய முடியவில்லை என்பதால், திரும்பி சிவனிடம் வந்து தோல்வியை ஒப்புக் கொள்கிறார், விஷ்ணு.

ஆனால் பிரம்மனோ, தலை உச்சியை அடையும் வழியில் சோர்வடைந்து போகிறார். அந்த நேரத்தில் அவரது கண்களுக்குத் தாழம்பூ ஒன்று தென்படுகிறது. சிவபெருமானின் தலை உச்சியிலிருந்து வருவதாகத் தாழம்பூ பிரம்மனிடம் கூறுகிறது. இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பிரம்மன், சிவபெருமானின் தலை உச்சியை நான் கண்டதாகச் சிவனிடம் வந்து கூறுமாறு தாழம்பூவிடம் பிரம்மன் கேட்கிறார்.

இதற்குத் தாழம்பூவும் ஒப்புக் கொள்ள, உடனடியாக இருவரும் கைலாயம் வந்து அடைகிறார்கள். அங்குத் திட்டம் தீட்டியபடி, பிரம்மனும் தாழம்பூவும் தங்களது பொய் நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். இதனை அறிந்த சிவபெருமான், தன்னை பூஜிக்க தாழம்பூவுக்குத் தகுதி இல்லை என சாபம் விடுகிறார்.

அதேபோல் பிரம்மனை யாரும் வணங்கவும் மாட்டார்கள், பிரம்மனுக்குக் கோயிலும் எழுப்ப மாட்டார்கள் என பிரம்மன் மீதும் சிவபெருமான் கோபம் கொள்கிறார். இவ்வாறு முதலும் முடிவும் இல்லாத சிவனை அறிந்த தினமே, முதலும் முடிவுமான ஒரு நாளில் கண்விழித்து தரிசனம் செய்யும் மகா சிவராத்திரி (maha shivratri) நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இதையும் படிங்க: Sivalaya Ottam: மகா சிவராத்திரி நாளில் 12 சிவாலயங்களுக்கு ஓடிச்சென்று வழிபாடு.. சிறப்பம்சம் என்ன?

இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் இந்து மத புராணங்களின்படி தேவர்களும் அசுரர்களும் விஷ்ணுவின் பாம்பு படுக்கையால் பாற்கடலைக் கடைந்து கொண்டிருந்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக கடைந்ததால் வந்த விஷம், அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால், பாற்கடலில் கடைந்த விஷத்தால் பூலோகம் ஆகிய பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்துவிடும் என்பதுதான்.

எனவே அந்த விஷத்தை தாமாக முன்வந்து அருந்தி, தனது தொண்டையில் நிலைநிறுத்திக் கொள்கிறார், சிவபெருமான். இதனால்தான் சிவபெருமான் ‘திருநீலகண்டர்’ என அழைக்கப்படுகிறார். இவ்வாறு பூமிக்கு வர வேண்டிய அழிவை தனது தொண்டையில் நிலைநிறுத்திய சிவபெருமான், மலையில் ஜோதியாகத் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் காட்சி அளிக்கிறார்.

இந்த தினமே சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. அதிலும், பூலோக உயிரினங்களுக்கு வர வேண்டிய அழிவை தனது தொண்டையில் நிறுத்தி, உலக மக்களை காத்ததால், அன்றைய தினம் அவரை கண் விழித்து தரிசிக்கும்போது, நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் சிவபெருமான் நிலைநிறுத்தி, நம்மை நல்வழிப்படுத்துவார் என்பதும் ஒரு வரலாறாகவும் நம்பிக்கையாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவைதவிர, அம்பிகையின் பிரார்த்தனையால் கிடைத்த சிவராத்திரி, வில்வ மலையால் வேடனின் பாவம் கழிந்த சிவராத்திரி, லிங்க வடிவில் முதன்முதலாகச் சிவபெருமான் தரிசனம் கொடுத்த சிவராத்திரி என வரலாறுகளைக் கூறிக் கொண்டேச் செல்லலாம்.

இதையும் படிங்க: Maha shivaratri: சிவ ஆலயங்களில் மகா சிவராத்திரி விழா.. அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

சிவராத்திரி Vs மகா சிவராத்திரி: ஏன் மகா சிவராத்திரி மாசி மாதத்தில் மட்டும் கொண்டாடப்பட வேண்டும் என்ற கேள்வி மக்களாகிய நாம் அனைவருக்கும் எழுந்திருக்கும். புராணங்களின்படி, சிவபெருமானின் திருவிளையாடல்கள் அனைத்தும் முடிவடைந்து, உயிரினங்களுக்கு அருள் பாலித்த நாள்தான் மாசி மாத சிவராத்திரி எனக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு மாத தேய்பிறைக்கு முந்தைய நாள், அதாவது அமாவாசையின் முந்தைய நாள் சிவராத்திரி எனக் கூறப்படுகிறது. இதில், மகா சிவராத்திரி என்பது மாசி மாத தேய்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுகிறது. தேய்பிறை சதுர்த்தி என்பது, தேய்பிறையின் 14வது நாள் ஆகும்.

மகா சிவராத்திரி வழிபாடு: உணவு, தண்ணீர் என எதையும் எடுத்துக் கொள்ளாமல் காலை முழுவதும் விரதம் இருந்து, நள்ளிரவு 12 மணி வரை கண் விழித்து சிவனை வழிபடுவதே மகா சிவராத்திரி நாளின் பிரதான வழிபாடாக ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விரதத்தில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் தீர்ந்து போகும் என்றும், நள்ளிரவில் சிவனை வழிபடுவதன் மூலம் அவரது ஜோதி ஒளி, நம் மீது வீசி அனைத்து சுப காரியங்களும் கைகூடும் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

இருப்பினும், பலர் தற்போது பால், உருளைக்கிழங்கு சார்ந்த உணவுகள், பேரீச்சம்பழம் ஆகியவற்றை விரத நேரத்தில் உட்கொண்டு வருவதாக ஆன்மீகம் சார்ந்தவர்கள் கூறுகின்றனர். இப்படி பல்வேறு புராணங்களையும், வழிபாட்டு முறைகளையும் கொண்ட இந்த மகா சிவராத்திரி இன்று (பிப்.18) இந்தியா முழுவதும் உள்ள இந்து மத நம்பிக்கையாளர்களால் கொண்டாடப்படுகிறது.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: மகா சிவராத்திரியில் உங்கள் ராசி எப்படி உள்ளது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.