மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் 2015ஆம் ஆண்டு 16 வயது சிறுமி ஒருவர் பள்ளி வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த இளைஞர் சிறுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதோடு அவரது தலைமுடியை பிடித்து இழுத்துள்ளார். குறிப்பாக இழிவான ஒரு சொல்லைப் பயன்படுத்தி சிறுமியை அழைத்துள்ளார்.
அதன்பின் சிறுமி போலீசாரிடம் புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கு மும்பையில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சிறப்பு நீதிபதி எஸ்ஜே அன்சாரி, “குற்றம் சாட்டப்பட்ட நபரால் சிறுமிக்கு பாலியல் ரீதியான தொந்தரவு அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, குற்றம் சாட்டப்பட்டவருக்கு காலம் தாழ்த்தாமல் தண்டனை கொடுப்பது அவசியமாகிறது.
சிறுமியை பாலியல் ரீதியாக இழிவான சொல்லால் அழைத்த 25 வயது நபருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. பெரும்பாலான இளைஞர்கள், பெண்களை இதுபோன்ற இழிவான சொற்களால் அழைப்பது வழக்கமாகி விட்டது வேதைக்குரியது” என்றார்.
இதையும் படிங்க: சென்னையில் இன்ஸ்டா காதல் மன்மதன் கைது!