மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தஹிசாரில் தண்டவாளத்தைக் கடந்து, முதியவர் ஒருவர் நடைமேடையில் ஏற முயன்றார். அப்போது, ரயில் மிக அருகில் வந்த நிலையில், காவலர் சுஜித் குமார் நிகம் துரிதமாகச் செயல்பட்டு முதியவரை விபத்திலிருந்து காப்பாற்றினார்.
இந்நிலையில், காவலர் நிகமினை பாராட்டி நிகிழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு காவலரை புகழ்ந்து பேசிய மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், "அனைவருக்கும் விரைவாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அஜாக்கிரதையாக செயல்பட்ட நபரின் கன்னத்தில் மேலும் சில முறை அறைந்திருக்க வேண்டும். இனி இதுபோன்று தண்டவாளத்தை கடப்பதை மக்கள் தவிர்கக வேண்டும்" என்றார்.
இதையடுத்து பேசிய காவலர் நிகம்," தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் மிகவும் குழப்பத்தில் இருந்தார். எனவே உடனே செயல்பட்டு அவரை காப்பாற்றினேன். நான் எது கடமையைதான் செய்தேன்" என்றார்.
இதையும் படிங்க: நூலிழையில் உயிர் தப்பிய முதியவர்: துரிதமாகச் செயல்பட்ட காவலருக்கு குவியும் பாராட்டுகள்!