உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொள்ள, மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி முடிவு செய்தார். இதற்காக நேற்றிரவு 9 மணிக்கு விமான நிலையம் சென்றுள்ளார். அங்கிருந்த அரசு விமானத்தில் பயணிக்க ஆளுநர் சென்றபோது, அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முறையான தகவல்கள் இதுவரை வரவில்லை என விமான நிலைய அலுவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் வேறு வழியின்றி தனியார் விமானத்தில் ஆளுநர் சென்றுள்ளார். இச்சம்பவத்தால் அரசுக்கும், மாநில ஆளுநருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தடுப்பூசி வேண்டும்: மோடிக்கு கால் செய்த ஜஸ்டின் ட்ரூடோ!