ETV Bharat / bharat

அவுரங்காபாத், ஒஸ்மானாபாத் நகரங்களின் பெயர் மாற்றம்: ராஜினாமாவுக்கு முன் உத்தவ் தாக்கரே செய்த காரியம்!

author img

By

Published : Jun 29, 2022, 9:51 PM IST

மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் நகரம் சம்பாஜி நகர் எனவும், ஒஸ்மானாபாத் நகரம் தாராஷிவ் எனவும் பெயர் மாற்றம் செய்ய உத்தவ் தாக்கரே தலைமை வகித்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் சற்றுமுன் உத்தவ் தாக்கரே, தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா அரசு ஒப்புதல்
மகாராஷ்டிரா அரசு ஒப்புதல்

மும்பை (மகாராஷ்டிரா): மகாராஷ்டிராவில் தொடரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் உத்தவ் தாக்கரே தலைமை வகித்த அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜூன் 29) நடைபெற்றது. இதில், தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், அவுரங்காபாத் நகரம் சம்பாஜிநகர் எனவும், ஒஸ்மானாபாத் நகரம் தாராஷிவ் எனவும் பெயர் மாற்றம் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு முன்னாள் விவசாயிகள் சங்க கட்சித் தலைவர் டி.பி பாட்டீல் பெயர் சூட்ட கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முகலாய பேரரசர் அவுரங்கசிப்பின் பெயரில் அவுரங்காபாத் நகரம் பெயர் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சற்றுமுன் உத்தவ் தாக்கரே, தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் ஆட்சி தப்புமா? - பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.