தானே: மஹாரஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 19 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தலோஜா எனும் பகுதியில் ஏசி பழுதுபார்க்கும் 19 வயது இளைஞன் ஒருவன், அடுக்குமாடி குடியிருப்பில் ஏசி பழுதுபார்க்கு பணியை முடிவிட்டு வரும் போது, கட்டிடத்தின் பார்க்கிங் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமியை லிப்ட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் மூன்றாவது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற 5 வயது சிறுமி வாந்தி எடுக்க தொடங்கியுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் கேட்கவே அவர் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனை கேட்டு உடனடியாக கீழே ஓடிசென்று பார்த்தபோது, அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை பிடித்து வைத்திருந்தனர்.
அதன் பின் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல்துறையினரிடம் அந்த இளைஞர் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் காவல்துறையினர் அந்த 19 வயது இளைஞரை போக்சோ வழக்கில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்களின் நிர்வாண வீடியோக்களை வைத்து மிரட்டிய கொடூரன் - ஸ்கெட்ச் போட்டுதூக்கிய போலீஸ்