ETV Bharat / bharat

போலி வீடியோவை பதிவிட்ட பீகார் யூ-டியூபர் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்பு சட்டம் - 15 நாட்கள் வரை நீதிமன்றக்காவல்! - காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக போலி வீடியோவை பகிர்ந்த புகாரில் கைதான பீகார் யூ-டியூபர் கஷ்யப் மீது, மதுரை போலீசார் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Kashyap case NSA
கஷ்யப் மீது வழக்கு
author img

By

Published : Apr 6, 2023, 11:01 PM IST

மதுரை: தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பீகார், ஜார்க்கண்ட் ஆகிய வடமாநிலங்களைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். குறிப்பாக திருப்பூரில் செயல்படும் ஆயத்த ஆடை நிறுவனங்களில், பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல், சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்கள் பகிரப்பட்டன.

இது, தமிழ்நாட்டில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. எனினும், பீகார், ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். போலி வீடியோக்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்தார்.

இதற்கிடையே பீகாரில் இருந்து வந்த அதிகாரிகள் குழு, வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினர். தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என அவர்களிடம், தமிழக அதிகாரிகள் எடுத்துரைத்தனர். போலி வீடியோக்களை பரப்பிய சிலரை போலீசார் கைது செய்தனர்.

  • YouTuber Manish Kashyap who has been sent to judicial custody till April 19 for posting fake videos of migrant labourers from Bihar "being attacked" in Tamil Nadu has been booked under National Security Act (NSA).

    — ANI (@ANI) April 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், போலி வீடியோக்களை பரப்பிய புகாரில், பீகார் மாநிலத்தை சேர்ந்த யூ-டியூபர் மணீஷ் கஷ்யப்பை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை மதுரை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, கஷ்யப்பை நேற்று (ஏப்ரல் 6) மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, கஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மதுரை காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் கூறுகையில், "தமிழ்நாட்டில் வசிக்கும் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல், யூ-டியூபர் கஷ்யப் போலி வீடியோக்களை பகிர்ந்துள்ளார். விசாரணையில் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.