நாட்டிலேயே முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவருக்கு தனி அடையாள அட்டை வழங்கும் பணியை மத்திய பிரதேச அரசு மேற்கொண்டுள்ளது. போபால் பகுதியைச் சேர்ந்த அஞ்சனா சிங் மற்றும் பரூக் ஜமால் ஆகியோருக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இதுவரை மூன்றாம் பாலினத்தவர்களை குறிப்பிடும் விதமாக ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகளில் மட்டுமே உள்ளன. இந்நிலையில், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் வகையில் மத்தியப் பிரதேசம் இந்தத் திட்டத்தை நடைமுறைபடுத்தியுள்ளது.
முன்னதாக, மூன்றாம் பாலினத்தவருக்கென பிரத்தியேக இணைய போர்ட்டல் தொடங்கப்படும் என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தவர் சந்த் கெலாட் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
தொடர்ந்து சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வந்த இந்த சமூகத்தினர், டிஜிட்டல் மூலமாக அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து உரிய அங்கீகாரத்தை பெறலாம் எனவும் அவர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: சிமென்ட் தொழிற்சாலைகள் சுயலாபத்திற்காக சந்தையை துஷ்பிரயோகம் செய்கின்றன - நிதின் கட்கரி