கட்னி: மத்தியப் பிரதேசத்தின் கட்னி மாவட்டத்தில் பர்கி சுரங்கப்பாதை கட்டடப் பணியின் இடிபாடுகளில் சிக்கிய 9 தொழிலாளர்களில் 5 பேரை மாநில பேரிடர் அவசர மீட்புப் படைக் குழுவினர் (SDERF) மீட்டுள்ளனர் என மத்தியப் பிரதேச மீட்புக்குழு தலைமையகம் இன்று (பிப்.13) தெரிவித்துள்ளது.
தரைக்குக் கீழ் உள்ளவர்களை மீட்டுள்ள நிலையில், மீதமுள்ள 4 தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை எண். 30இல் பார்கி பாதாள கால்வாயின் ஒரு பகுதியான 70 அடி ஆழமான சுரங்கப்பாதை, அதன் கட்டட பணியின் போது திடீரென இடிந்தது. இதனால், அந்த இடத்தில் பணிபுரிந்த ஒன்பது தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
மீட்புக்குழுவுடன், தலைமை காவல் ஆணையர் சுனில் ஜெயின், அப்பகுதி காவல் துறையினர் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும், கட்னி மாவட்ட ஆட்சியர் பிரியங்கா மிஸ்ரா கூறுகையில், 'பல மணிநேர போராட்டத்திற்குப் பின் ஐந்து தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள நான்கு நபர்களைத் தேடி வருகின்றனர்' எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து மீட்கப்பட்டவர்களில் ஒருவருக்குக் கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், ஏனைய தொழிலாளர்கள் எந்த பாதிப்பும் அடையாமல் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியப் பிரதேச முதலமைச்சர் வருத்தம்!
இச்சம்பவத்திற்கு, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் மீட்புக்குழு நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
-
#WATCH | Of the 9 labourers trapped, 5 have been rescued after an under-construction tunnel of the Bargi underground canal caved in at Sleemanabad in Katni district of Madhya Pradesh; 4 yet to be rescued. SDERF team at the spot: Administration pic.twitter.com/O0vLdYZj8B
— ANI (@ANI) February 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Of the 9 labourers trapped, 5 have been rescued after an under-construction tunnel of the Bargi underground canal caved in at Sleemanabad in Katni district of Madhya Pradesh; 4 yet to be rescued. SDERF team at the spot: Administration pic.twitter.com/O0vLdYZj8B
— ANI (@ANI) February 12, 2022#WATCH | Of the 9 labourers trapped, 5 have been rescued after an under-construction tunnel of the Bargi underground canal caved in at Sleemanabad in Katni district of Madhya Pradesh; 4 yet to be rescued. SDERF team at the spot: Administration pic.twitter.com/O0vLdYZj8B
— ANI (@ANI) February 12, 2022
இந்த சுரங்கப்பாதையில் கட்டப்பட்டு வரும் பாதாளக் கால்வாய் மூலம் ஜபல்பூர் மாவட்டத்தின் 60 ஆயிரம் பகுதிகளுக்கும், கட்னி மாவட்டத்தின் 21 ஆயிரத்து 823 ஹெக்டேர்களுக்கும், சத்னா மாவட்டத்தின் 1 லட்சத்து 59 ஆயிரத்து 655 ஹெக்டேருக்கும் பாசன வசதி மேம்பட உள்ளது.
இந்த சுரங்கப்பாதையானது M/S படேல் - SEW (கூட்டு நிறுவனம்) ஹைதராபாத் ஆகிய நிறுவனங்களின்கீழ் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆந்திராவில் ரூ.850 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு அழிப்பு