கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கர் கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கிறது. இதன் காரணமாக இந்திய அரசிடம் மடகாஸ்கர் அரசு உதவியை நாடியுள்ளது. இதையடுத்து நல்லெண்ண அடிப்படையில், மடகாஸ்கர் அரசுக்கு ஆயிரம் மெட்ரிக் டன் அரசியும், ஒரு லட்சம் HCQ மாத்திரைகளையும் இந்திய கடற்படையின் ஜலஷ்வா கப்பல் மூலம் இந்திய அரசு அனுப்பியுள்ளது.
இந்திய அரசின் உதவிக்கு மடகாஸ்கர் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.எஸ். ஒலிவியா நன்றி தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட அவர், துயரென்று வருகையில் மடகாஸ்கர் நாட்டிற்கு உதவிசெய்ய முதல் நாடாக இந்தியா முன்வருகிறது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு ஜனவரியில் மடகாஸ்கர் நாட்டில் கடும் புயல் ஏற்பட்டபோது, இந்திய கடற்படை கப்பல் ஏராவட் முதலில் சென்று உதவிசெய்தது. அதேபோல் கடந்தாண்டு மார்ச் மாதம் அந்நாட்டிற்கு 600 மெட்ரிக் டன் அரிசியை இந்தியா அனுப்பிவைத்தது.
இதையும் படிங்க: நகத்தைப் பார்த்து உடலில் உள்ள பிரச்சினையைக் கண்டுபிடிப்பது எப்படி?