டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் வேளையில் அமலாக்கத்துறை எனக்கு சம்மன் அனுப்பியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவையில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, "நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும்போது அமலாக்கத்துறையின் சம்மன்களை எம்பிக்கள் தவிர்க்க முடியாது. சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக, சட்ட நடைமுறைகளை மதிப்பது நமது கடமை.
இதுபோல தங்களுக்கு சிறப்புரிமை உள்ளதாக எம்பிக்கள் தவறாக எண்ணிக்கொள்ளக்கூடாது. குற்றவியல் வழக்குகள்வரும் பட்சத்தில் எம்பிக்களுக்கு எந்தவொரு சலுகையும் கிடையாது" எனத் தெரிவித்தார். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக கார்கேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதோடு நேற்று (ஆக 4) நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "இந்தியா ஜனநாயகத்தின் மரணத்தை கண்டுவருகிறது" - ராகுல் காந்தி