ETV Bharat / bharat

ராஜஸ்தானில் லேசான நிலஅதிர்வு - ராஜஸ்தான் நிலநடுக்கம்

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது.

அதிகாலையில் நிலநடுக்கம்
அதிகாலையில் நிலநடுக்கம்
author img

By

Published : Feb 18, 2022, 12:14 PM IST

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர் அருகே இன்று காலை 8 மணிக்கு திடீர் நிலஅதிர்வு ஏற்பட்டது. ஜெய்ப்பூரில் இருந்து வடமேற்கே 92 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மாநிலத்தில் உள்ள சிகார் மற்றும் ஃபதேபூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் மூன்று வினாடிகள் நீடித்ததாக ஃபதேபூரில் உள்ள உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இது ரிக்டர் அளவில் 3.8ஆக பதிவாகியுள்ளது.

நில அதிர்வால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். சேத விவரங்கள் குறித்து எந்த வித தகவலும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க : சிசிடிவி: 6 வயது மகனை வலுகட்டாயமாக ரயிலில் தள்ளிய தந்தை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.