லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 45 ஆயிரத்து 773 கூம்பு ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன என்று மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு கூடுதல் பொது இயக்குனர் பிரசாந்த் குமார் கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில், “மாநிலத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில் இருந்து 45 ஆயிரத்து 773 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. 58 ஆயிரத்து 861 கூம்பு ஒலிபெருக்கிகளில் சப்தத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளது” என்றார்.
கூடுதல் தலைமை செயலர் அவனிஷ் அவஸ்தி கூறுகையில், “மாநில அரசின் உத்தரவின் பேரில் சட்ட விரோத கூம்பு ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன” என்றார். உத்தரப் பிரதேசத்தில் வழிபாட்டு தலங்களில் உள்ள சட்டவிரோத கூம்பு ஒலிபெருக்கிகளை அகற்ற யோகி ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் மகாராஷ்டிராவில் உள்ள மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் உள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று ஏப்.13ஆம் தேதி மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு செய்யாவிட்டால் மே3ஆம் தேதிக்கு பிறகு கூம்பு ஒலிபெருக்கிகள் அகற்றப்படாத மசூதிகள் முன்பு ஹனுமன் சாலிஜா பாடப்படும் எனக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பரபரக்கும் டெல்லி; மம்தா-கெஜ்ரிவால் சந்திப்பு!