பிகார் மாநிலம், நாலந்தாவில், நேற்று(நவ.05) விராட் கோலியின் பிறந்தநாளை முன்னிட்டு அச்சு அசல் விராட் கோலி போல் தோற்றத்தில் உள்ள முஷாரப் ஆசம் என்பவர் கோலியின் பிறந்தநாளைக் கொண்டாடினார். ஆம், 'பிகாரின் விராட் கோலி' என அழைக்கப்படும் இவர் நாலந்தாவில் வசித்து வருகிறார்.
ஆடை வியாபாரியான இவரை, மக்கள் சாலையில் அல்லது கிரிக்கெட் மைதானத்திற்குச்செல்லும்போது 'கோலி-கோலி' என மக்கள் கூச்சலிட்டனர். பின்னர் அவர் போகும் இடமெல்லாம் செல்ஃபி மற்றும் ஆட்டோகிராஃப் வாங்க குவியத்தொடங்கினர்.
’இரண்டாம் கோலி’: முஷாரப் ஆசம் சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் உள்ளவர். இந்த நிலையில், இவரை கோலி என அழைக்கத்தொடங்கியதும், இவரும் விராட் கோலியைப்போல் தாடி மற்றும் ஹேர்ஸ்டைலையும் வைக்க ஆரம்பித்தார். விராட்டின் தோற்றம் மற்றும் உயரமும் இவருடன் ஒத்துப்போனது. பின்னர் காலப்போக்கில் வெளியில் எங்கு சென்றாலும் மக்கள் இவரை ’இரண்டாம் கோலி’ என அழைக்கத்தொடங்கினர்.
முஷாரப் ஆசமின் தந்தை இறந்த பிறகு குடும்பத்தின் பொறுப்பு முழுவதும் இவரிடம் வந்தது. இவருக்கு இரண்டு சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். விராட்டின் தோற்றத்தால் முஷாரப் சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறார். விராட் கோலியின் ரசிகர்களைப்போல் இவருக்கும் கோலியை நேரில் சந்தித்து, தானும் ஒரு சிறந்த வீரராக மாறி நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என விரும்புகிறார்.
முஷாரப்பின் தாயாரான பில்கிஸுக்கு கிரிக்கெட் மீது பிரியம். முஷாரப்பை போல அவரது தாயாருக்கும் தனது மகன் விராட்டைப் போல் சிறந்த வீரராக உருவாகி, குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென ஆசைப்படுகிறார். இதனால் நேற்று விராட் கோலியின் பிறந்தநாளில், அவரது பிறந்தநாள் என்பதைப்போல் உணர்ந்து, கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்தை மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
இதையும் படிங்க: Video:நடிகை ஐஸ்வர்யா லட்சுமி 'குமரி' படம் குறித்து காணொலி வெளியீடு!