இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலவும் போர் நிறுத்த நடவடிக்கை தற்போது 100 நாள்களைக் கடந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பின் இரு தரப்பிடையே இறுக்கமான சூழல் நிலவிவந்த நிலையில், 2021ஆம் ஆண்டு தொடக்கத்தில் இரு நாட்டு உளவுத்துறை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டவர்களின் பலதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் இந்தப் போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது.
ராணுவத் தளபதி பேட்டி
போர் நிறுத்த நடவடிக்கை 10 நாள்களைத் தாண்டிய நிலையில், ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே ஜம்மு காஷ்மீர் எல்லையை ஆய்வு செய்தார். இது குறித்து அவர் பேசுகையில், "எல்லைப் பகுதியில் நிலவும் போர் நிறுத்த நடவடிக்கை மேலும் பல காலம் தொடர வேண்டும் என்பதையே இரு தரப்பும் விரும்புகிறது. அதேவேளை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் பல உள்ளன. அவற்றை உடனடியாக வேரறுக்க வேண்டும்.
இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக அவநம்பிக்கை நிலவிவரும் நிலையில், ஓரிரவில் அது மாறிவிடாது. எனவே, போர் நிறுத்தம் போன்ற சின்ன சின்ன முன்னேற்றம் நீண்ட காலப் பலனை தரும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமரை விமர்சித்தப் பத்திரிகையாளர் மீதான தேச துரோக வழக்கு தள்ளுபடி!