ETV Bharat / bharat

உல்ஃபா அமைப்பின் தலைவர் யார்? தொடங்கியது விசாரணை! - london court

பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்டு இந்தியாவில் தடைசெய்யப்பட்ட உல்ஃபா அமைப்பின் தலைவர் என கூறப்படும் அவிஜித் அசோம் என்கிற டாக்டர் முகுல் ஹசாரிகாவை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

London court starts hearing to ascertain who is Ulfa (Independent) chairman
ulfa (Independent) chairman
author img

By

Published : May 18, 2022, 7:13 PM IST

75 வயதான லண்டனைச் சேர்ந்த மருத்துவர் அவிஜித் அசோம்,உல்ஃபா அமைப்பின் தலைவர் என்று இந்திய அரசாங்கம் கூறுகிறது. இந்நிலையில், அவிஜித் அசோம் என்பவரின் மற்றொரு பெயர் தான், ஹாசரிகா என்று லண்டன் நீதிமன்றத்தில் வாதம் தொடங்கியுள்ளது.

அஸ்ஸாமின் குவஹாத்தி மருத்துவக்கல்லூரியில் மருத்துவப்பட்டம் பெற்ற டாக்டர். ஹசாரிகா, பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு 2004 முதல் கிழக்கு லண்டனில் உள்ள எல்டனில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த செவ்வாயன்று ஹசாரிகாவின் வழக்கறிஞரான பென் கூப்பர் வெஸ்ட்மினிஸ்டர், நீதிபதியிடம், தனது கட்சிக்காரர் அஸ்ஸாமில் எந்த பிரிவினைவாத அமைப்பிலும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறினார். கூப்பர் தனது தரப்பைச்சேர்ந்த முகுல் ஹசாரிகா டாக்டர் என்றும்; இந்திய அரசாங்கத்தால் கூறப்படும் டாக்டர் அவிஜித் அசோம் அல்ல என்றும் வாதிட்டார். கூப்பர் தனது கட்சிக்காரர், அவருடைய மருத்துவப் பயிற்சியைத் தவிர சில மனிதாபிமான வேலைகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளார் என்று தனது வாதத்தை கூறினார்.

ஆனால், இந்திய கவுன்சிலைச் சார்ந்த ஆலோசகர்,டாக்டர் ஹசாரிகா உல்ஃபா உடன் அதன் தலைவராக செயலாற்றியுள்ளார் என்றும், அவர் 2016 முதல் 2019 வரை மியான்மரில் உள்ள உல்ஃபா முகாம்களில் தன்னுடைய கணிசமான நேரத்தைச் செலவிட்டார் என்றும் கூறினார். டாக்டர் அவிஜித் அசோம் என்பது டாக்டர் முகுல் ஹசாரிகாவின் புனைப்பெயர் என்றும், அஸ்ஸாமில் உள்ள இளம் தலைமுறையினரை உல்ஃபா அமைப்பில் சேர தூண்டுவதாகவும், அரசுக்கு எதிராகப் போரை நடத்த அவர் ஊக்குவித்து வருவதாகவும் அவர் கூறியதாகத் தெரிகிறது.

டாக்டர் ஹசாரிகா கடந்த ஆண்டு லண்டனின் ஒப்படைப்பு பிரிவினராலும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதன் பின்பு கடந்தாண்டு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

உல்ஃபா அமைப்பின் தலைவராக கருதப்படும் டாக்டர் அவிஜித் அசோமின் வழக்கை 2017ஆம் ஆண்டு முதல் இந்திய தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருவதினை இங்கே குறிப்பிடலாம்.

இதுதொடர்பாக குழு ஒன்று மத்திய அஸ்ஸாமின் நாகோன் மாவட்டத்தில் டாக்டர் ஹாசரிகாவின், மூதாதையர் வீட்டிற்குச்சென்று விசாரணை செய்துள்ளது.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் மதுபானக் கடையில் கையெறி குண்டு தாக்குதல் - பணியாளர் பலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.