ETV Bharat / bharat

நாடாளுமன்றத்தில் எச்சரிக்கப்பட்ட பாஜக எம்பி; விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பாஜக! - lok sabha speaker

Lok Sabha Speaker issues warning to BJP MP: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் சந்திரயான் வெற்றி குறித்து விவாதம் செய்த பகுஜன் சமாஜ் கட்சி (BSP) எம்.பி டேனிஷ் அலியைக் கடுமையாக விமர்சித்த பாஜக எம்.பி ரமேஷ் பிதுரிக்கு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் அவதூறு குறித்து விளக்கம் அளிக்க பாரதிய ஜனதா கட்சி எம்பி பிதுரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

lok-sabha-speaker-om-birla-issues-warning-to-bjp-mp-ramesh-bidhuri-for-offensive-remarks-in-parliament
நாடாளுமன்றத்தில் அவதூறாக பேசிய பாஜக எம்பியை எச்சரித்த மக்களவை சபாநாயகர்!
author img

By PTI

Published : Sep 22, 2023, 7:39 PM IST

Updated : Sep 22, 2023, 10:17 PM IST

டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் சந்திரயான் வெற்றி குறித்து விவாதம் செய்த பகுஜன் சமாஜ் கட்சி (BSP) எம்.பி டேனிஷ் அலியைக் கடுமையாக விமர்சித்த பாஜக எம்பி ரமேஷ் பிதுரிக்கு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்று வரும் மக்களவை சிறப்புக் கூட்டத்தொடரில் பாஜக எம்பி ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சி (BSP) எம்பி டேனிஷ் அலியை மோசமான வார்த்தைகளால் பேசிய வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. பாஜக எம்பி ரமேஷ் பிதுரி இதே போல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரை அவதூறாகவும், மோசமான வார்த்தைகளாலும் பேசிய வீடியோக்களும் வெளியாகி உள்ளன.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பாஜக எம்பி ரமேஷ் பிதுரியின் மோசமான கருத்துக்களை தீவிரமான கவனத்தில் எடுத்துக் கொண்டதாகவும், மேலும் இந்த இதன் மூலம் நேரத்தை விரயம் செய்ய விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், எம்பி ரமேஷ் பிதுரி வரும் காலங்களில் இது போன்ற மோசமான பேச்சுகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், எம்.பி ரமேஷ் பிதுரியின் கருத்துக்கள் நாடாளுமன்ற பதிவுகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் வருத்தம் தெரிவித்தார். பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி தெரிவித்த கருத்துக்களால் மன உளைச்சல் ஏற்பட்டு இருந்தால், எதிர்கட்சிகளிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், பல எதிர்கட்சித் தலைவர்கள் அமைச்சரின் மன்னிப்பு திருப்திப்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மன்னிப்பு போதுமானதாக இல்லை என்றும், இந்த சம்பவம் நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகவும் பாஜக எம்பி ரமேஷ் பிதுரியை இடைநீக்கம் உள்பட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சி சார்பாக பா.ஜ.க எம்.பி ரமேஷ் பிதுரி மோசமான பேச்சுகள் நாடாளுமன்ற வரலாற்றில் இருண்ட நாள் எனத் தெரிவித்துள்ளனர்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி மனோஜ் ஜா கூறும்போது, நாடாளுமன்றத்தில் பா.ஜ.க எம்.பி ரமேஷ் பிதுரி வகுப்புவாத அவதூறு கருத்துக்கள் ஏமாற்றத்தையும், கவலையையும் அளிப்பதாகத் தெரிவித்தார். மேலும் இது நாட்டின் சிறுபான்மையினர் நிலையைச் சுட்டிக் காட்டுவதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் பிரதமரின் மௌனம் குறித்து விமர்சனம் செய்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் பா.ஜ.க எம்.பி ரமேஷ் பிதுரி கைது செய்யக் கோரிக்கை விடுத்துள்ளன. தேசிய மாநாட்டுத் தலைவர் உமர் அப்துல்லா கூறும்போது, பா.ஜ.க எம்.பி ரமேஷ் பிதுரியின் மோசமான கருத்துக்கள் முஸ்லிம்கள் மீதான பார்வையைக் காட்டுவதாகவும், இது கவலை அளிப்பதாக உள்ளதாகவும் தெரிவித்தார். பாஜகவில் உள்ள முஸ்லிம்கள் இதனை எவ்வாறு ஏற்றுக் கொள்கின்றனர் என கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி சார்பாக நாடாளுமன்றத்தில் அவதூறு கருத்துக்களை பேசியது தொடர்பாக பாஜக எம்பி ரமேஷ் பிதுரியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. இதற்கு எம்.பி ரமேஷ் பிதுரி 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கல்வி கற்க வந்த மணிப்பூரைச் சேர்ந்த 23 குக்கி மாணவர்கள்: இரு கரம் நீட்டி வரவேற்ற கண்ணூர் பல்கலைக்கழகம்.!

Last Updated : Sep 22, 2023, 10:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.