நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையை தொடர்ந்து, பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடந்தது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, பிப்ரவரி 11ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இரண்டாவது அமர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கியது.
இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடரில், குற்றவியல் நடைமுறை, டெல்லி முனிசிபல் கார்பரேஷன் உள்ளிட்ட சில முக்கிய மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்ற நடவடிக்கைகள் பெரும்பாலும் நிடைவடைந்ததால், பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது.
இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டன. பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாக நிறைவடைந்துள்ளது.
இதையும் படிங்க : குற்றவியல் மசோதா 2022 மாநிலங்களவையில் தாக்கல்!