ETV Bharat / bharat

லோக் அதாலத்தை மேலும் பலப்படுத்துவது அவசியம்

லோக் அதாலத்திற்கு இணையான வேறொன்றை இந்த உலகத்தில் காண முடிவதில்லை. பல ஆண்டுகளாக லோக் அதாலத் விஷயத்தில் பெற்றிருக்கும் அனுபவத்தை நன்முறையில் பயன்படுத்தி இந்த நீதி வழங்கும் அமைப்பை நாம் இன்னும் பலமாக்கிட வேண்டும்.

Lok Adalat
லோக் அதாலத்
author img

By

Published : Apr 13, 2021, 1:42 PM IST

இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 39ஏ சமுதாயத்தில் மெலிவான பிரிவினருக்கும், ஏழைகளுக்கும் இலவச சட்ட உதவியை வழங்கி அனைவருக்குமான நீதியை உறுதிப்படுத்துகிறது. எல்லோருக்கும் சம வாய்ப்பு கொடுப்பதற்காகச் சட்டச் சேவைகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான தேவையை இந்திய அரசு உணர்ந்துகொண்டது 1987இல் - அதாவது நாடு சுதந்திரம் அடைந்து நான்கு தசாப்தங்களுக்குப் பின்புதான். நாடாளுமன்றம் சட்டச் சேவை ஆணையங்கள் சட்டத்திற்கு 1987-லிலேயே ஒப்புதல் அளித்திருந்தாலும், அந்தச் சட்டம் 1995இல்தான் நடைமுறைக்கு வந்தது. அதன் பின்புதான் தேசிய சட்டச் சேவைகள் ஆணையம் என்பது உருவானது.

இதெல்லாம் நடந்தபின்பு லோக் அதாலத்துகளும், சர்ச்சைகள் தீர்க்கும் மற்ற மாற்று அமைப்புகளும் உருவெடுத்தன, சாமான்ய மனிதனுக்கும் வேகமான நீதியை வழங்கும் பொருட்டு. நான்காவது தேசிய லோக் அதாலத் கடந்த சனிக்கிழமை தெலங்கானாவில் நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட 39,000 வழக்குகள் இந்த லோக் அதாலத்தில் தீர்த்துவைக்கப்பட்டன; பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.49 கோடி மதிப்பிலான இழப்பீடுகள் வழங்கப்பட்டன.

மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம் உள்பட மொத்தம் 16 மாநிலங்கள் கோவிட் நோய்த்தொற்று பெருக்கத்தால் லோக் அதாலத் நடத்துவதைத் தள்ளிவைத்திருக்கின்றன. கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில் கர்நாடக மாநிலம் லோக் அதாலத்தை நடத்தி 3.3 லட்சம் வழக்குகளைத் தீர்த்துவைத்து, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பீடுகளை வழங்கியிருக்கிறது.

கடந்த ஆண்டில் கோவிட் பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது, நாட்டில் தேசிய லோக் அதாலத் இரண்டு முறை நடத்தப்பட்டு, 12.6 லட்சம் வழக்குகள் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துவைக்கப்பட்டன; மேலும் 12.8 லட்சம் வழக்குகளும் தீர்த்துவைக்கப்பட்டன. மொத்த இழப்பீடுகளின் தொகை ரூபாய் 1,000 கோடியைத் தாண்டியது.

24 மாநிலங்களில் சட்டச் சேவை ஆணையங்கள் ஒளி, ஒலி ஊடகங்கள் வாயிலாக மின்னணு லோக் அதாலத்தை நடத்தி தேவைப்பட்டவர்களுக்கு வேகமான நீதியை வழங்கிக் கொண்டிருக்கின்றன. நமது சட்ட அமைப்பு படுவேகமாகப் புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

லோக் அதாலத்திற்கு இணையான வேறொன்றை இந்த உலகத்தில் காண முடிவதில்லை. பல ஆண்டுகளாக லோக் அதாலத் விஷயத்தில் பெற்றிருக்கும் அனுபவத்தை நன்முறையில் பயன்படுத்தி இந்த நீதி வழங்கும் அமைப்பை நாம் இன்னும் பலமாக்கிட வேண்டும்.

பல தசாப்தங்களாக நீதிமன்றங்களில் அம்பாரமாகக் குவிந்து கிடக்கும் வழக்குகளினால் கோடிக் கணக்கான மக்களின் நெஞ்சங்களில் வலியேந்திப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையை எப்படிச் சீர்ப்படுத்துவது என்பது பற்றி நிறைந்துகிடக்கும் கருத்துகளுக்குப் பஞ்சமில்லை. பிரச்சினை அதில் இல்லை; கருத்துகளை நடைமுறைப்படுத்துவதில் இருக்கிறது.

மாவட்ட, தாலுகா நீதிமன்றங்களில் நிலுவையில் கிடக்கும் வழக்குகளில் கிட்டத்தட்ட 17 விழுக்காடு மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்டவை. உயர் நீதிமன்றங்களில் 20.4 விழுக்காடு வழக்குகள் கடந்த ஐந்து ஆண்டுகளிலிருந்து பத்து ஆண்டுகளாக நிலுவையில் இருக்கின்றன. கடந்த இருபது ஆண்டுகளாக 17 விழுக்காடு வழக்குகள் குவிந்து கிடக்கின்றன.

ஐம்பதுக்கும் மேற்பட்ட விழுக்காடு வழக்குகளில் வழக்குத் தொடுத்தவர்கள் மத்திய, மாநில அரசுகள்தான். இந்த மாதிரியான நிலைமைக்கு ஈடுயிணை எதுவுமில்லை. மூன்று தசாப்தங்களுக்கு முன்பு, சட்ட ஆணையம், சரியான வழக்கு நியதியைப் பின்பற்றி வழக்குகளின் நிலுவையைக் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைசெய்தது. தங்கள் பிரஜைகளுடன் அரசுகள் மோதல் போக்கைக் கைவிட்டு சமாதானமாகப் போக வேண்டும் என்று முன்பு உச்ச நீதிமன்றமும் சொல்லி இருக்கிறது.

லோக் அதாலத்திற்கு வருகின்ற வழக்குகளில் பெரும்பாலானவை நிலம் கையகப்படுத்தல் சர்ச்சைகள், தொழிலாளர் பிரச்சினை, ஓய்வூதியம், நுகர்வோர் புகார்கள், மின்சாரம், தொலைபேசி, நகராட்சிச் சேவைகள் ஆகியவற்றைப் பற்றியே இருக்கின்றன. உச்ச நீதிமன்றம் சொல்லியபடி, அரசு அலுவலர்கள் அந்த மாதிரியான வழக்குகளில் மக்களோடு மோதுவதற்குப் பதில் சமாதானமான கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மக்களின் நீதிமன்றங்கள் என்ற பிம்பத்தைக் காப்பாற்றும் வண்ணம், பாதிக்கப்பட்ட மக்களின் நெஞ்சக் குமுறலை, வலியைத் தீர்க்கும்படியான முறையில் அதாலத்துகள் நீதி வழங்க வேண்டும். நாட்டின் மூலை முடுக்குகளுக்குக்கூட சட்டச் சேவைகள் சென்றடையும் வண்ணம், ஒவ்வொரு கிராமத்திலும் அல்லது அறிவுக்குப் பொருந்தும்படி கட்டமைக்கப்பட்ட ஒவ்வொரு கிராமத் தொகுப்பிலும் குறைந்தபட்சம் ஒரு சட்ட மையம் அமைக்க வேண்டிய தேவையை 2011ஆம் ஆண்டில் தேசிய சட்டச் சேவைகள் ஆணையம் (நால்ஸா) வலியுறுத்தியது.

இப்போது அந்த மாதிரியான சட்ட மையங்கள் 14,000 இருக்கின்றன. இந்தியாவில் இப்போது சுமார் ஆறு லட்சம் கிராமங்கள் இருக்கின்றன. வேகமான நீதியை மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டுசெல்ல வேண்டும். அதற்கு முன்பு லோக் அதாலத் அமைப்பை மேலும் பலப்படுத்துவது அவசியம்.

இதையும் படிங்க: இந்தியாவில் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.